‘ஆங்கிலத்தில் ஏதோ ஒன்று சரியில்லை’

muhபட்டதாரிகள் பல  ஆண்டுகள்  ஆங்கிலம்  கற்ற  பின்னரும்  அம்மொழியில்  சரளமாக  உரையாட  முடியாமலிருப்பது  ஏன்  என்பது  கல்வி  அமைச்சர்  முகைதின்  யாசினுக்குப்  புரியாத  புதிராக  இருக்கிறது.

துணைப்  பிரதமருமான  முகைதின், மலேசிய  உயர்க் கலவி செயல்திட்டம்  மீதான  கலந்துரையாடலைத்  தொடக்கிவைத்துப்  பேசினார்.
“ஒரு  மொழியில்  தொடர்புகொள்ள  முடியவில்லை  என்றால்  அதைக்  கற்பதால்  என்ன  பயன்?”,என்றவர்  வினவினார்.

“ஒரு  வேளை ஆசிரியர்களின்  தரம், மாணவர்களின்  அக்கறையின்மை,  பகாசா   மலாயுவுக்கு  நிறைய  நேரம்  ஒதுக்கப்படுவது  காரணமாக  இருக்கலாம்.
“அதற்காக  பகாசா  மலாயுமீது  பழி  போடக்கூடாது”, என  முகைதின்  கூறினார்.