அன்வார்- கிட் சியாங் கூட்டம் ஆட்சிக்கு வந்தால் யாரையும் விட்டு வைக்க மாட்டார்கள்

dr mஅன்வார்  இப்ராகிமும்  கிட்  சியாங்கும்  கூட்டரசு  அரசாங்கத்தைக்  கைப்பற்றி  ஆட்சி நடத்தினால் மனம்போன  போக்கில் கைது  செய்வார்கள்  என  எச்சரிக்கிறார்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்.

இந்த  அச்சம்தான்  பிஎன்னை   ஆட்சியில்  வைத்துள்ளது. மற்றபடி  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  செல்வாக்கு   எல்லாம்  காரணமில்லை  என  முன்னாள்  பிரதமர்  கூறினார்.

“மக்கள்  பிஎன்னை (கடந்த  பொதுத் தேர்தலில்)  ஆதரித்தது. பிஎன்னுக்காக  அல்ல, நஜிப்புக்காக  அல்ல, அன்வார்மீதுள்ள  பயம்தான்  காரணம்.

“அன்வார் பிரதமரானால்  கிட் சியாங்  துணைப்  பிரதமரும்  உள்துறை  அமைச்சருமாவார். மக்கள் கைது  செய்யப்படுவார்கள். அதுதான்  அவர்களை  நிராகரித்தனர்”.நேற்று  சினார்  ஹரியானுக்கு  வழங்கிய  நேர்காணலில்  மகாதிர்  இவ்வாறு  கூறினார்.

ஆனால், அன்வாரைச்  சிறைக்கு  அனுப்புவது  நல்லதல்ல  என  மகாதிர்  நினைக்கிறார்.  அது  பிஎன்னுக்கு  எதிராக  வேலை  செய்யும்.

“அன்வார் சிறை  சென்று  அவரது  இடத்துக்கு  அஸ்மின்  அலி  வந்தால்  மக்களின்  மனம்  மாறக்  கூடும்.

“மக்கள் அன்வாரைக்  கண்டு  அஞ்சுகிறார்களே  தவிர  அஸ்மினைக்  கண்டு  பயப்படுவதில்லை”, என்றாரவர்.