ரபிஸி: மன்னிப்பு கேட்க முடியாது, வாருங்கள் நீதிமன்றம் செல்வோம்

 

naib-rosmahபிகேஆர் உதவித் தலைவரும் பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான ரபிஸி ரமலி தாம் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று பிரதமர் நஜிப்பிடமும் அவரது துணைவியார் ரோஸ்மாவிடமும் கூறியுள்ளார்.

தாம் தமது அறிக்கையை நீதிமன்றத்தில் தற்காத்துக்கொள்ளப் போவதாக ரபிஸி தெரிவித்தார்.

கடந்த வாரம், பிரதமர் நஜிப்பின் வழக்குரைஞர்கள் 14 நாட்களுக்குள் மன்னிப்பு கோர வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய கடிதத்தை ரபிஸியிடம் சார்வு செய்தனர்.

கடந்த நவம்பர் 23 இல், ரபிஸி எண்ணெய் மானியம் மற்றும் ரோஸ்மாவுக்கான வைர மோதிரம் பற்றி பேசியிருந்தார்.

ரபிஸியின் சார்பில் நஜிப்பின் வழக்குரைஞர் நிறுவனத்திற்கு பதில் அளித்த டையம் மற்றும் காமினி வழக்குரைஞர் நிறுவனம் நஜிப்பின் rafiziகோரிக்கைகள் அனைத்தையும் தங்களுடைய கட்சிக்காரர் நிராகரிப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும், ரபிஸி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் பொதுநலன் சார்ந்த எண்ணெய் மானியம் குறித்து கேள்வி எழுப்பும் கடமை அவருக்கு இருக்கிறது.

அவ்வாறே, பிரதமர் என்ற முறையில் அக்கேள்விக்கு பதில் கூற வேண்டிய கடப்பாடும் நஜிப்புக்கு இருக்கிறது. இருந்தும், நஜிப் தங்களுடைய கட்சிக்காரர் ரபிஸிக்கு எதிராகச் சட்டநடவடிக்கை எடுத்திருப்பது குறித்து அவர் ஆச்சரியமடைந்துள்ளார் என்று டைம் மற்றும் காமினி நிறுவனம் நஜிப்பின் வழக்குரைஞர் நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளது.