அமெரிக்க அறிஞர்: முஸ்லிம்கள் பாதுகாப்பற்ற உணர்வுடன் வாழ்வது ஏன்?

us scholarமுஸ்லிம்கள்  தங்களுக்குப்  பாதுகாப்பில்லை  என  நினைப்பது ஏன்  என்பது  அமெரிக்க  இஸ்லாமிய  கல்விமான்  இப்ராகிம்  மூசாவுக்குப்  புரியவில்லை.

“உலக  மக்கள்தொகையில்  1.2 பில்லியன்  பேர்  முஸ்லிம்கள். அவர்களில்  பலர்  பெரும்  பணக்காரர்கள், உலகின்  எண்ணெய்  தொழிலே  அவர்களின்  கைகளில்தான்.

“பிறகு  ஏன் பாதுகாப்பில்லை  என்று  நினைக்க  வேண்டும்?”, என்றவர் வினவினார். அவர்  ஜார்ஜ்டவுனில்  பினாங்கு  கழகம்  ஏற்பாடு  செய்திருந்த  ஒரு  நிகழ்வில் கலந்துகொண்டு  ‘பன்மைத்துவத்தை  உருவாக்குதல்’  என்ற  தலைப்பில்  பேசினார்.

“தன்னை  அறியாதிருக்கும்போதும்,  தன்  மரபுகள், வரலாறு,  விழுமியங்கள்மீது  நம்பிக்கை  குறையும்போதும்  பாதுகாப்பற்ற  உணர்வு  வந்து  விடுகிறது.

“இதற்கு  மருந்து, கூடுதல்  ஆன்மஞானம்  பெறுவதுதான்”, என்றாரவர்.

இந்தப் பாதுகாப்பற்ற  உணர்வுகூட  அரசியல்வாதிகள்  வாக்குகள்  பெறுவதற்காக  பேசும்  பேச்சுகளைக்  கேட்டுத்தான்  உருவாகி விடுவதாக  நினைப்பதாகவும்  இப்ராகிம்  கூறினார்.