இன்னும் மூன்று வாரங்களில் தேர்வுகள் என்ற நிலையில் தம்மையும் ஸவ்ஆன் ஷம்சுடினையும் உடனடியாக நீக்குவதற்கு மலாயாப் பல்கலைக்கழகம் செய்துள்ள முடிவு அதனிடம் கொஞ்சமும் ஈவிரக்கம் இல்லை என்பதைத்தான் காண்பிக்கிறது என முன்னாள் மாணவர் தலைவர் ஃபாஹ்மி சைனல் கூறினார்.
ஃபாஹ்மிக்கு இது இறுதி ஆண்டு.
இந்தத் தண்டனை எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றும் விசாரணை என்பதெல்லாம் வெறும் கண்துடைப்புதான் என்றும் அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
பல்கலைக்கழகத்தின் அனுமதியின்றி எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ததற்காக ஃபாஹ்மியும் ஸவ்ஆனும் பல்கலைக்கழகத்தைவிட்டு விலக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், அறுவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அரசாங்க பல்கலை கழகங்களில் , தனியார் பல்கலை கழகங்களில்
( MMU ) பயிலும் பல மாணவர்கள் நிலை இது தான் . திமிர் ,தலை கணம் ( மூளை இல்லாவிட்டாலும் தலை கணத்தில் மட்டும் குறைச்சல் இல்லை ) பிடித்த பேராசிரியர்களால் பல மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் . பணம் கட்டி படிக்க அனுப்பினாலும் பல பேராசிரியர்கள் அவர்களை ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை ஒழுங்காக படித்து கொடுப்பதே இல்லை . இதை தடுக்க ஒரு வழியும் இல்லை . பல மாணவர்கள் வேதனைகளை தாங்கி கொண்டு படித்து முடித்தால் பொது என்று இருகின்றனர் . இந்த பூனைகளுக்கு யார் தான் மணி கட்டுவது ???
அனைத்தும் அம்னோவின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவர்களிடம் எந்த இரக்கத்தை எதிர்பார்க்கிறீர்கள்!
பல்கலைகழகத்திர்க்குப் போனோமா, நல்லா படிச்சி பட்டம் வாங்கினோமா என்று இல்லாம தருதலைத்தனம் பண்ணிக்கிட்டு இருந்தா உமக்கு எதற்கு பட்டப் படிப்பு?. பேசாம கூடிய விரைவில் அரசியல் கட்சியில் சேர்ந்து சைபுல் மாதிரி பணம் பண்ண கத்துக்கோ. அப்புறம் பாரு அந்த பட்டத்தையே நீர் காசு கொடுத்து வாங்கிடலாம்.
இரக்கமா? ஒரு கிலோ என்ன விலை?
theni … இவர் என்ன பாலர் பள்ளி மாணவரா???. பல்கலைக்கழக மாணவர். படிப்பது மட்டுமே இந்த நாட்டுக்கு எந்த பயனயும் கொண்டு வராது. மாறாக துடிப்பு மிக்க மாணவர்கள் மட்டுமே, நாளைய தலைவர்கள் ஆக முடியும் .
இவர் அப்படி என்ன தவறு இழைத்து விட்டார்? ஒரு ஜனநாயக நாடு என்பது, எதிர்கட்சியும் சேர்ந்தது. மாணவர்களுக்கு அனைவரின் கருத்துகளும் தேவை படும்.
அரசாங்க வளாகங்களில், ஆளும் கட்சியினர் மட்டுமே நுழைய முடியும் என்பது முட்டாள்தனம். ஏமாற்று வேலை. அப்படி பார்த்தால், எதிர்க்கட்சியினர் நாடாளும் மன்றதினுல் கூட நுழைய கூடாது அல்லவா?
நம் மா இ கா. வில் கூட, நன்கு படித்த மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் போராட்ட குணம் இன்றி இருக்கும் அவர்களை மக்கள் மதிக்கிறார்களா?
படிப்பை தவிர மற்றதை எல்லாம் கற்று தராங்க..எப்படி தான் பிள்ளைகள் வாழ போறாங்க?
நிழல் நிஜமாகாது. எதற்கும் சட்ட வரம்பு உள்ளது. மாணவர்களுக்கும் அவ்வாறே. மாணவர் என்ற நிலை முடிந்ததும் அவரவர் பாடு. இதை நினைவில் வைத்துக் கொண்டு படிக்கப் போனால் நல்லது. இல்லையேல். அவனும் நாசம். அவனை நம்பி இருந்த பெற்றோருக்கும் நாசம். இது தேவையா?.
நிழல் நிஜமாக வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நிஜம் நிழல் ஆகி விட கூடாது. உண்மைக்கு போராடு. பொது வாழ்கை என்று வந்து விட்டால், போராட்டம் தவிர்க்க இயலாது. போராட்டதை கண்டு மிரலும் உனக்கு, பொது நலன் சார்ந்த கருத்து களத்தில் என்ன வேலை??