மலாயாப் பல்கலைக்கழக மாணவர் குழு ஒன்று, ஏழு யுஎம் மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை இரத்துச் செய்யப்படும்வரை எதிர்ப்பைக் காண்பிக்கும் நோக்கில் பல்கலைக்கழகத்தில் முகாமிட்டுத் தங்கும்.
அந்த முகாமிடும் இயக்கம் பல்கலைக்கழக நுழைவாயிலுக்கு வெளியில் இன்றிரவே தொடங்கும் என அதன் தலைவர் வான் நூர் ஸியாமிமி வான் சாஜிரி கூறினார்.
யுஎம்8 என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் எட்டு யுஎம் மாணவர்கள்மீது அவர்கள் பிகேஆர் ஆலோசகர் அன்வார் இப்ராகிமின் பேச்சுக்கு எனத் தீர்மானிக்கப்பட்டு சிலர் பல்கலைக்கழகத்தை விட்டு நீக்கப்பட்டார்கள், சிலருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.ஏற்பாடு செய்தார்கள் என்பதற்காக பல்கலைக்கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.
அவர்களில் எழுவர் குற்றவாளிகள் எனத் தீர்மானிக்கப்பட்டு சிலர் பல்கலைக்கழகத்தை விட்டு நீக்கப்பட்டார்கள், சிலருக்கு அபராதம் விதிக்கப்பட்டது
“எங்கள் பல்கலைக்கழகம் எவ்வளவு தரம்தாழ்ந்து போயுள்ளது என்பதை மலேசியர்கள் அறிய வேண்டும் என்பதற்காக இங்கு கூடியுள்ளோம்”, என வான் ஸியாமிமி கூறினார்.
படிப்பை தவிர மற்றதெல்லாம் நல்லா வருது,
கடைசியில் பிச்சை எடுக்கத்தான் லயேக்கு.
இத்தகைய துடிப்புமிக்க மாணவர்கள் இல்லயெனில், படித்த பிண்டங்கள் மட்டும் இருந்து என்ன பயன். யானை பாகனின் ஆணைக்கு உட்பட்டு நடக்கும் கும்கி யானையை போலதான் வாழ்கை இருக்கும். பாரதியின் பிறந்த நாள் இன்று. வீர கவியின் போராட்ட குணம் உங்களுக்கு முன்மாதிரி ஆகட்டும்.
எங்கே அடக்குமுறை வரம்பு மீறுகிறதோ அங்கே தான் தீவிரவாதம் தலை தூக்குகிறது. மாணவர்கள் அரசியலில் ஈடுபட கூடாது என்று சட்டத்தில் இருக்கிறதா அல்லது பல்கலைகழக விதிமுறை மட்டும் தானா? காலத்துக்கு ஒத்துவராத சட்டமும் விதி முரையும் தேவையா? அவர்கள் இடைநிலைப்பள்ளி மாணவர்கள் அல்லர். அன்றாட மற்றும் நடப்பு சூழ்நிலை அறிந்த பல்கலைக்கழக மாணவர்கள். அவர்களை தீவிர அரசியலில் ஈடுபட வைத்தது யார்? அவர்களை விட்டு விட்டு மாணவர்களை தண்டிப்பதும் கண்டிப்பதும் பல்கலைக்கழக படிப்பிலிருந்து தூக்குவதும் அத்துமீறல் தான். இது மீளும் பல திவிரவாதங்களுக்கு வழிவகுக்கலாம். பிற ‘நல்ல’ மாணவர்களையும் எதிர்ப்பைக்காட்டத் தூண்டலாம்.