எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம், சில தரப்பினர் இஸ்லாத்தைப் பயன்படுத்தி “இனவாதத்தையும் அப்பட்டமான அநீதியையும்” தற்காக்க முனைவது அச்சமயத்தையும் முஸ்லிம் சமூகத்தையும் அவமதிப்பதாகும் எனச் சாடியுள்ளார்.
பேச்சுரிமையையும் மனித உரிமையையும் மதிப்பது மலாய்க்காரர் வாழ்வுக்கும் இஸ்லாத்துக்கும் ஆபத்து என்ற கருத்தை அவர் நிராகரித்தார்.
ஆனால், அதைத்தான் வலச் சாரி தரப்புகள் பரப்பி வருகின்றன என்றாரவர்.
அதி தீவிர மலாய் அமைப்பான, மலாய் ஆலோசனை மன்றம் ஜனவரி 10-இல் புக்கிட் ஜலிலில் நடத்தத் திட்டமிருக்கும் மாபெரும் பேரணி பற்றி பக்கத்தான் தலைவர்கள் கூடிப் பேசியதாகவும் அன்வார் கூறினார்.
MCC மட்டுமா இனவாதத்தை கடை பிடிக்கின்றது?> இனவாதத்தினால் எவன் பலன் அடைகின்றானோ அவனெல்லாம் இஸ்லாத்தை பயன்படுத்தி இனவாதத்தை நேர்மையாக்கின்றான் கள்— சுதந்திரத்திற்கு முன் இப்படி பேசியிருக்க வேண்டும் அப்போது தெரிந்திருக்கும் எப்படி சுதந்திரத்திற்கு ஆதரவு கிடைத்திருக்கும் என்று. நன்றிகெட்ட நாதாரிகள். கையால் ஆகாத கபோதிகள் மதத்தையும் இனத்தையும் பாவித்து இந்த நாட்டையே உண்மையான ஒற்றுமை இல்லாமல் ஆக்கிவிட்டான் கள்