மேன்மேலும் சங்கடத்துக்கு ஆளாக்க வேண்டாம்: எம்பி அரசாங்கத்துக்கு அறிவுறுத்து

surenஅரசாங்கம்  அமெரிக்கத்  தூதர்  ஜோசப்  யுன்னைக்  கூப்பிட்டு  அனுப்பியது  ஏன்  என்று  வினவும்  பாடாங்  செறாய்  எம்பி  என். சுரேந்திரன்  இப்படிப்பட்ட  செயல்களால்  நாடு  மேலும்  சங்கடமான  நிலைக்குத் தள்ளப்படும்  என்கிறார்.

தேச நிந்தனைச்  சட்ட  விவகாரத்தில்  நஜிப்  அடித்த  பல்டி  குறித்து  யுன்  தெரிவித்த  அதே கவலை  பெரும்பாலான  மலேசியர்களும்  உண்டு.  ஏனென்றால்  எதிரணியினருக்கும்  சாதாரண  மலேசியர்களுக்கும்  எதிராக  பயன்படுத்தக்கூடிய அடக்குமுறைச்  சட்டமாகத்தான்  அது  பார்க்கப்படுகிறது.

“உலக  நாடுகளில்  ஒன்று என்ற  முறையில் நாட்டில்  நீதி, மனித  உரிமைகள்   குறித்து  அனைத்துலக  அளவில்  குறைகூறப்படுவதை  மலேசியாவால்  தவிர்க்க  இயலாது.

“பிஎன்,  வெளிநாடுகளிலிருந்து  வரும்  நியாயமான  குறைகூறல்கள்மீது   கோபம்  கொள்வதன்  மூலம்  நம்மை  மேலும் இக்கட்டான  நிலைக்கு  ஆளாக்கிவிடக்கூடாது. தேச  நிந்தனைச்  சட்டத்தை  வைத்துக்கொள்வதென்று  அம்னோ- பிஎன்  செய்த  முடிவுதான்   நாடு  உலக  அளவில்  குறைகூறப்படுவதற்கு  வழி   வகுத்து  விட்டது”, என  சுரேந்திரன்  கூறினார்.