ஐந்து முன்னாள் ஐஎஸ்ஏ கைதிகளுக்கு ரிம4.5 மில்லியன் இழப்பீடு

isaபத்து  எம்பி  தியான்  சுவா,  ஹுலு  கிளாங்  சட்டமன்ற  உறுப்பினர்  சாஆரி  சுங்கிப்  உள்பட   முன்னாள்  உள்நாட்டுப்  பாதுகாப்புச்  சட்ட(ஐஎஸ்ஏ)  கைதிகள் ஐவருக்கு  ரிம4.5 மில்லியன் இழப்பீடு கொடுக்க  முறையீட்டு  நீதிமன்றம்  இன்று  உத்தரவிட்டது.

மற்ற  மூன்று  சமூக  ஆர்வலர்கள்  ஹிஷாமுடின்  ரயிஸ்,  முன்னால்  பிகேஆர்  உச்சமன்ற  உறுப்பினர்  பத்ருல்  அமின்  பஹாரோம்,  பதருடின்  இஸ்மாயில்  ஆகியோராவர்.
அவர்களுக்கு  இழப்பீடு  கொடுத்து  கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றம்  வழங்கிய  தீர்ப்பை  முறையீட்டு  நீதிமன்றம்  நிலைநிறுத்தியது. ஆனால் இழப்பீட்டுத்  தொகையை  அது  குறைத்தது. உயர்  நீதிமன்றம்  அவர்கள்  தடுத்து  வைக்கப்பட்ட  ஒவ்வொரு  நாளைக்கும் ரிம15,000  கொடுக்க உத்தரவிட்டிருந்ததை  அது ரிம10,000  ஆகக்  குறைத்தது.

ரிபோர்மாசி  இயக்கத்தில்  பங்கு கொண்டவர்களான  இந்த  ஐவரும் தங்கள்மீது  பயங்கரவாதிகள்  என்று  குற்றஞ்சாட்டிய முன்னாள்  போலீஸ்  படைத்  தலைவர்  நோரியான்  மாய்மீது  அவதூறு  வழக்கு தொடுத்திருந்தனர். நோரியான்  மாய்  தவிர்த்து  அப்போதைய  உள்நாட்டு  அமைச்சர்  அப்துல்லா  அஹ்மட்  படாவி, அரசாங்கம்  ஆகியோரும்  எதிர்வாதிகளாகக்  குறிப்பிடப்பட்டிருந்தனர்.