யுனிவர்சிடி மலாயா நுழைவாயிலில் கூடாரமிட்டு ‘யுஎம் ஆக்கிரமிப்பு’ இயக்கத்தை நடத்தும் மாணவர்களைக் கலைந்து செல்லும்படி போலீசும் கோலாலும்பூர் மாநகராட்சி மன்றமும் (டிபிகேஎல்) உத்தரவிட்டுள்ளன.
நேற்று முதல் அந்த இயக்கத்தை நடத்திவரும் மாணவர்களைக் கலைப்பதற்கு போலீசாரும் டிபிகேஎல் அமலாக்க அதிகாரிகளுமாக சுமார் 30 பேர் பிற்பகல் 3 மணிக்கு அங்கு வந்து சேர்ந்தனர்.
மாணவர்கள் இப்போதைக்கு உத்தரவுக்குப் பணிந்து போவதாக யுஎம் புரோ-மகாசிஸ்வா தலைவர் சஃபான் ஷம்சுடின் கூறினார்.
“கூடாரங்களைக் கலைத்து விட்டோம். இல்லையேல் அவர்கள் அள்ளிக்கொண்டு போய் விடுவார்கள். பிறகு கூடாரங்களைப் போடக்கூடும்”, என மலேசியாகினியிடம் அவர் தெரிவித்தார்.