நேப்பாளி பெண் தண்டிக்கப்பட்டதைத் தற்காக்கும் ஏஜி-இன் செயல் ஏமாற்றமளிக்கிறது

cecilநேப்பாள் நாட்டவரான  நிர்மலா  தாப்பாவின்  வழக்குரைஞர், நிர்மலா குற்றஞ்சாட்டப்பட்டு  தண்டிக்கப்பட்டது  சரிதான்  என்று  வாதாடும்  சட்டத்துறைத்  தலைவரின் (ஏஜி)  செயல்  “ஏமாற்றமும்  வியப்பும்” அளிப்பதாகக்  கூறினார்.

நிர்மலாவுக்குக்  கருக்கலைப்பு  செய்துகொண்டதற்காக  ஓராண்டுச்  சிறைத்  தண்டனை  விதிக்கப்பட்டதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப்  பத்திரிகையைக்  கூர்ந்து ஆராய்ந்தால், அவர்  புக்கிட்  மெர்தாஜாம்  மருத்துவ  நிலையமொன்றில்  சுயமாகக்  கருக்கலைப்பு  செய்து  கொண்டதற்காக  தண்டிக்கப்பட்டிருப்பது  தெரிய  வரும்  என்று  வழக்குரைஞர்  சிசில்  ராஜேந்திரா  கூறினார்.

“நிர்மலா  அவர்  செய்யாத  ஒன்றுக்காகக்  குற்றஞ்சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டது  ஏன்  என்பதுதான் எங்களுக்குப்  புரியவில்லை.

“தகுதிபெற்ற  மருத்துவர்  ஒருவர்தான்  நல்லெண்ணதுடன்  சட்டப்பூர்வமாக  அவருக்குக்  கருக்கலைப்பு  செய்திருக்கிறார்”.

ஆனால்,  மருத்துவரிடம்  விசாரணை  நடத்திய  பின்னர்  அவரை  விடுவித்து  விட்டனர்.

“அதேவேளை குற்றப்பத்திரிகையில்  கூறப்பட்டுள்ள  செயலை  அவர்  சுயமாக  செய்துகொண்டதுபோல  அவர்மீது  குற்றம் சாட்டி  தண்டனையும்  கொடுக்கப்பட்டிருக்கிறது.

மருத்துவர் தாமே  கருக்கலைப்புச்  சிகிச்சை  செய்ததாக  வாக்குமூலம்  கொடுத்துள்ள  போதிலும்  நிர்மலா  மட்டுமே  தண்டிக்கப்பட்டிருக்கிறார்.

இன்னொருவர்  செய்ததாக  ஒப்புக்கொண்ட  ஒரு  செயலைப்  புரிந்தார்  என  ஒரு  பெண்ணின்மீது  குற்றம்சாட்டப்பட்டுத்  தண்டிக்கப்பட்டது  எப்படி  என  சிசில்  ஏஜியை  வினவினார்.