பாலாவின் துணைவியார் நஜிப்புக்கு எதிராகத் தொடுத்திருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது

 

Mrs Bala1காலஞ்சென்ற தனிப்பட்ட துப்பறிவாளர் பி. பாலசுப்ரமணியத்தின் துணைவியார் எ. செந்தமிழ் செல்வி பிரதமர் நஜிப், அவரது துணைவியார் ரோஸ்மா மற்றும் இதர எழுவருக்கு எதிராகத் தொடுத்திருந்த ரிம1.9 மில்லியன் வழக்கை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.

பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கான சட்டப்பூர்வமான தகுதி செந்தமிழ் செல்விக்கு கிடையாது என்று நீதிபதி ஹாஸ்னா முகமட் ஹசிம் கூறினார்.

இன்று அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என்று செல்வியின் Mrs Bala3வழக்குரைஞர் அமெரிக் கூறினார்.

இன்றைய தீர்ப்பு ஓரளவு நம்பிக்கை தரும் என்று எதிர்பார்த்தாக கூறிய அமெரிக் எல்லாம் வேறுவிதமாக நடந்து விட்டது என்றார்.

தமது ஊகம் மலேசியாவில் எந்தச் சட்டம் பயன்டுத்தப்படுகிறது என்பதை விட யார் மீது வழக்கு தொடுக்கப்படுகிறது என்பது முக்கியமானது என்றாரவர்