பல்கலைக்கழக தேர்தலில் முறைகேடுகள்: யுயுஎம் மாணவர்கள் குற்றச்சாட்டு

uumயுனிவர்சிடி  உத்தாரா மலேசியா (யுயுஎம்) மாணவர்  மன்றத்தைச்  சேர்ந்த  மாணவர்  குழு  ஒன்று,  நவம்பர்  27 தேர்தலில்  பல்கலைக்கழக  அதிகாரிகள்  குறுக்கீடு  இருந்ததாகக்  கூறுகின்றது.

மாணவர்களுக்குப்  பகலுணவு  வழங்கி  அவர்களைப்  பல்கலைக்கழகத்துக்கு  வேண்டிய  வேட்பாளர்களுக்கு  வாக்களிக்குமாறு  கேட்டுகொண்டது  உள்பட  பல்கலைக்கழக  அதிகாரிகள் பல திருகுதாளங்களில்  ஈடுபட்டார்களாம்.
ட்ரேன்போர்மாசி  மஹாசிஸ்வா  என்று  தன்னை  அழைத்துக்கொள்ளும்  அக்குழு,  உதவி  துணை  வேந்தர்  அப்துல்  மாலேக்  அப்துல்  கரிமுக்கு  எழுதிய  திறந்து  மடலில்  இவற்றையெல்லாம் பட்டியலிட்டுள்ளது.

மலேசியாகினி  பல்கலைக்கழக  அதிகாரிகளுடன்  தொடர்புகொள்ள  முயன்றது. முடியவில்லை.