சம்பளம் கொடுபடாதிருந்த பெர்னாமா டிவி (பிடிவி) பணியாளர்கள் சுமார் 30 பேர், இரண்டு நாள்களுக்கு முன் நவம்பர் ,மாதத்துக்கான பகுதிச் சம்பளமாக ரிம500 மட்டுமே வழங்கப்பட்டதை அடுத்து நேற்று மீண்டும் விடுப்பில் சென்றனர்.
மலேசியாகினிக்குக் கிடைத்த கடிதமொன்றில் “பெர்னாமா டிவி சைனர்ஜி முழுச் சம்பளத்தைக் கொடுத்தாலொழிய டிசம்பர் 10-இலிருந்து நிதி நெருக்கடியின் காரணமாக வேலைக்கு வர இயலாது” என்று பணியாளர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இதற்குமுன் அவர்கள் அக்டோபர் 20-இல் முழுச் சம்பளம் வாங்கிய பின்னர் நவம்பர் மாதச் சம்பளம் கொடுபடாத நிலையில் கடந்த வாரம் முழுவதும் வேலைக்குச் செல்லவில்லை.
இதனிடையே, பணீயாளர்களின் பிரச்னை பற்றி பெர்னாமா செய்தி நிறுவனத்தின் பொது மேலாளர் சுல்கிப்ளி சாலே இன்று பின்னேரம் அவர்களுடன் பேச்சுகள் நடத்துவார் என பிடிவி வட்டாரங்கள் தெரிவித்தன.
பெர்னாமா, அரசு சார்ந்த நிறுவனம். அதன் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கப் படவில்லை என்றால் ஏன் அரசாங்கம் தலையிட்டு தீர்க்கவில்லை?. பானையில் சோறு இருந்தால்தானே, அகைப்பையில் வரும்!. இங்கேயே கருவூலம் காலி. புதைகுழி மண்ணில் மூழ்குவோர் எப்படி பிறருக்குக் கை கொடுத்து தூக்கி விட முடியும்?. அப்புறம் எங்கே பெர்னமாவிர்க்குக் அரசாங்கம் கை கொடுக்க முடியும்?. இம்மாத இறுதிக்குள் ‘Cayman Island’ -ல் இருந்து 1MDB – வின் 7 பில்லியனுக்கும் அதிகமான பணத்தைக் கொண்டு வருவதற்காக, பண பரிவர்த்தனை சந்தையில் மலேசியாவின் ரிங்கிட் – டை தரம் தாழ்த்தி வைத்திருக்கின்றானோ என்றுகூட சந்தேகம் வருகின்றது!. அமெரிக்கன் டாலரை நமது நாட்டு வெள்ளிக்கு மாற்றினால் அதனால் அதிகமாக கிடைக்கப் பெரும் மலேசியா வெள்ளியை நாங்கள் இலாபமாக பெற்றோம் என்றுக் கூட சொல்லிக் கொள்ள வாய்ப்பிருக்கின்றது. எதையும் யாம் அறியோம் பராபரமே.
எல்லாம் ச\nasib அவன் சுரண்டியிருப்பான் போயி கேளுங்கள்
எங்கள் கம்பெனியில் ஒரு லெக் தாதா இருக்கிறார். அவர் எப்போது கம்பெனியை வாங்கினாரோ அப்போது முதல் ஒழுங்காக சம்பளம் வருவதில்லை. இபிஎப், சொக்சோ எதுவும் முறையாக வெட்டுவதில்லை. அது போல் யாரோ ஒரு லெக் தாதா பெர்னாமாவில் நுழைந்து விட்டார் போலும். அதனால்தான் அங்கும் சம்பளப் பிரச்னை வந்து விட்டது.
மீடியா பிரிமா எனப்படும் அம்நோவுடன் தொடர்புடைய நிறுவனம் அதிக அளவில் தொழிலாளர்களை தன்னார்வ ஒய்வு விடுப்பில் (VSS) வேலையில் இருந்து ஒய்வு கொடுத்திருப்பதைப் பார்த்தால் அந்த குழுமத்தில் உள்ள விளம்பர நிறுவனங்கள் வருமான பிரச்னையை எதிர் நோக்குவதாக தெரிகின்றது. விளம்பரதாரர்கள் குறைந்து வருவது இதற்கு காரணம் என்றால் பொருளாதாரம் நலிவடைகின்றது என்று பொருள். மழை வரப் போகுது என்று வானிலை அறிக்கை ஒன்று சொல்கின்றது .