அம்னோ தொகுதித் தலைவர் ஒருவர், கடன் தொல்லைகளை எதிர்நோக்கும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் உருவாக்கமான 1மலேசியா மேம்பாட்டு நிறுவன(1எம்டிபி)த்துக்கு எதிராக போலீசில் புகார் செய்துள்ளார்.
பினாங்கு பத்து கவான் அம்னோ தொகுதித் தலைவர் கைருடின் அபு ஹசான் இன்று பிற்பகல் கோலாலும்பூர் டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் அப்புகாரைச் செய்தார்.
“1எம்டிபி-இன் நிதி நிர்வாகம்மீது எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. அதில் வெளிப்படைத்தன்மை இல்லை”, என்றாரவர்.
எதிரணியினர், 1எம்டிபி-யை “ஊழல்களில் பெரிய ஊழல்” என்று வருணித்துள்ளனர். முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டும்கூட கடன்களில் சிக்கிக் கொண்டிருக்கும் அந்த முதலீட்டு நிறுவனத்தைக் கடுமையாகக் குறை கூறியுள்ளார்.
மேலும் பல ஊழல்கள் வெளிவந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை.
தவறாகப் புரிந்து கொண்டீர்கள். 1எம்டிபி யின் நோக்கமே வெளிப்படைத்தன்மை நோக்கமில்லாமல் செயல்பட்டு சிலரைப் பணக்காரர் ஆக்க வேண்டுமென்பது தான்! அது சரியாகத் தான் செயல்படுகிறது!
அம்நோகாரனே போலிஸ் புகார் செய்கின்றான் என்றால் இது அவர்களே ஊதி விடும் நெருப்பு. நம் நம்பிக்கை நாயகனின் அஸ்தமனக் காலம் நெருங்கி விட்டது என்பதற்கு இதுவே ஆதாரம். வேறு வழியில்லை. தப்பிக்க வேண்டுமானால் ஒரே வழி ‘Operasi Lalang II’ நடத்தி மக்கள் மனதை திருப்பினால் மட்டுமே முடியும். இல்லையேல், இனியும் சூறாவளிக் கடலில் நீந்த முடியாது என்ற நிலைக்கு வந்தாகி விட்டது.
எந்த அரசாங்க சார்புடைய நிறுவனம் நல்ல முறையில் லாபகரமான வழியில் நடத்தபடுகின்றது? எல்லா நிறுவனங்களிலும் சுரண்டுபவர்களும் சொந்தக்காரன்களும் ஜால்றாக்கலுமே பதவியில் உட்கார்ந்து சுரண்டிக்கொண்டிருக்கின்றனர்.
இதயத் திசைத் திருப்பவும் மக்களை ‘சாந்தப்படுத்தவும்’ இன்னும் இரண்டு நாட்களில் petrol மற்றும் டீசல் விலைக் குறைப்பு அறிவிப்பு வரும். சரி. இந்த 1MDB. கடன் தொல்லைக்கு ஆளானவர்களின் அனைத்துலக கடப்பிதழ் எப்போது முடக்கப்படும்? அவர்கள் கூற்றுப்படி இதுவும் ஒரு தேச நிந்தனைதானே..அதற்கு என்ன நடவடிக்கை?