சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் 1மலேசியா மேம்பாட்டு பெர்ஹாட் (1எம்டிபி) அதன் கட்டப்படாமலிருக்கும் கடனைக் கட்டுவதற்வதற்கான கால நீட்டிப்பை பேங்க் நெகாராவிடமிருந்து பெற்றுள்ளது என்று “வட்டாரங்களை” மேற்கோள் காட்டி மூத்த செய்தியாளர் எ. காடிர் ஜாயின் தமது வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
இக்கால நீட்டிப்புக்கான கோரிக்கையை பேங் நெகாராவின் ஆளுனர் ஸெட்டி அக்டார் அசிஸ் சமீபத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஏற்றுக்கொண்டார் என்று காடிர் கூறிக்கொண்டார்.
1எம்டிபி வாங்கியிருக்கும் பெரும் கடன்கள் குறித்து ஸெட்டி அதிருப்தி கொண்டிருந்த போதிலும் அவர் இக்கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். இல்லை என்றால் அதனால் அது வங்கி அமைவுமுறையின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்தக் கூட்டத்தில் 1எம்டிபி உயர் அதிகாரிகளுக்கும் பேங்க் நெகாரா அதிகாரிகளுக்கும் இடையில் “மிகக் கடுமையான சொற்கள்” பரிமாறிக்கொள்ளப்பட்டதாகவும் காடிர் கூறிக்கொண்டார்.
1எம்டிபியின் சொத்து ரிம51.4 பில்லியனாக இருக்கையில் அதன் கடன் இதுவரையில் ரிம49 பில்லியனை எட்டியுள்ளது.
மகாதிர் சாடல்
மேற்கூறப்பட்ட கூட்டத்தின் போது 1எம்டிபியின் தலைவர் லோடின் வோக் கமாருடின் உடனடியாகப் பதவி துறக்க முன்வந்ததாகவும், ஆனால் அது பேங்க் நெகாராவை பொறுத்த விசயமல்ல என்று கூறப்பட்டதாம்.
“லோடினை நியமித்தது பிரதமர் நஜிப். அவர் பதவி விலக முன்வந்தது உண்மை என்றால், அவர் அதை நஜிப்பிடம் தெரிவிக்க வேண்டும்”, என்று காடிர் மேலும் கூறினார்.
கேமன் தீவில் வைத்திருக்கும் ரிம7 பில்லியனை நாட்டிற்கு திருப்பிக் கொண்டுவர அதனால் “முடியுமா அல்லது கொண்டு வருமா?” என்ற சர்ச்சையில் 1எம்டிபி சிக்கியுள்ளது.
முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட்டும் 1எம்டிபியின் உயர்மட்ட அதிகாரிகளின் செயல்பாட்டு முறைகளைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
1எம்டிபியின் விவகாரங்கள் குறித்து அதன் எதிர்வினை என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காக மலேசியாகினி 1எம்டிபியை தொடர்பு கொண்டுள்ளது. பதிலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.
இதேபோல் பணக் கஷ்டத்தில் இருக்கும் வீட்டுக் கடனை பெற்றவர்களுக்கும், அந்த வங்கிக் கடனை செயற்பாடட்ற கடனாக (Non performing loan) அறிவிக்க 6 மாத கெடு பேங்க் நெகரா கொடுக்க முடியுமா? ஆண்டானுக்கு ஒரு சட்டம், அடிமைக்கு ஒரு சட்டம்!. நல்லா உருப்படும் இந்த நாடு!. கூடிய விரைவில் வங்கியில் வீட்டுக் கடனை பெற்றவர்களுக்கும் இதே நிலையை அறிவிக்க வேண்டிய கட்டாயம் வரும். அந்த அளவுக்கு இந்த நாட்டை ஆளுபவர்கள் நம்மை மீள முடியாத புதைக் குழி மண்ணில் சிக்க வைத்துள்ளார்கள்.
எல்லாம் அவன்கள் கையில் இருக்கும்போது வேறு என்ன நடக்கும்? 57 க்கும் இவ்வாண்டிர்க்கும் ஒப்பிட்டு பாத்தால் எந்த இனம் பணத்தோடு கோலாகலாமாக இருக்கின்றது? அதிலும் உட்கார்ந்து கொண்டு ஒன்றும் செய்யாமல் நாட்டின் வளங்களை அவன்களின் சொந்த சொத்து போன்றுதானே தின்று தீர்த்து கொண்டிருக்கின்றன்கள்– இது என்றுமே நிற்காது–இவன்கள் போனால் இன்னொருவன்