டிஏபி மாநாட்டில் ஹுடுட்டுக்குக் கண்டனம்: பாஸ் தலைவர்கள் வரவில்லை

dapஇன்று  தொடங்கிய  டிஏபி  ஆண்டுக் கூட்டத்தில் நாட்டில்  சமயச்  சட்டங்களை  அமல்படுத்தும்  முயற்சி  வெகுவாகக்  குறை  சொல்லப்பட்டது.

சுபாங்  ஜெயாவில்  நடைபெறும்  கூட்டத்தில்  தொடக்கவுரை  ஆற்றிய  டிஏபி  இடைக்காலத்  தலைவர்  டான்  கொக் வாய், “அண்மைக்காலமாக  பல  தரப்புகள்  சமய  அடிப்படையிலான  சட்டங்களைக் கொண்டுவரும்  முயற்சியில்  ஈடுபட்டு  வருகின்றன.  பல இனங்களையும்  சமயங்களையும்  கொண்ட  ஒரு  நாட்டில் அப்படியெல்லாம்  நடந்துகொள்ளக்  கூடாது”, எனக் கூறினார்.

டான்  ஹுடுட்  என்றோ  பாஸ் என்றோ  கூறவில்லை  என்றாலும்  அவை  பற்றித்தான்  குறிப்பிடுகிறார்  என்பது  வெள்ளிடைமலை. மலேசியா ஒரு  சமயச்சார்பற்ற  நாடு  என்பதை  வலியுறுத்த  அவர்  மிகவும்  முயன்றார்.

பிகேஆர் உயர் தலைவர்கள்  அக்கூட்டத்துக்கு  வந்திருந்த  வேளையில்  பாஸ்  தலைவர்களைக்  காணவில்லை. பாஸ், அதன்  மத்திய  செயல்குழு  உறுப்பினர்  ஹட்டா ரம்லியை  மட்டுமே  அனுப்பி  வைத்திருந்தது.