டிஏபி: 14வது பொதுத் தேர்தலுக்குப் போகும்போதே பிரதமரையும் தீர்மானித்து விட வேண்டும்

guan14வது  பொதுத்  தேர்தலில்  போட்டியிடும்போதே  பிரதமர்  பதவி  ஏற்கப்போகின்றவர்  யார்  என்பதையும்  பக்கத்தான்  ரக்யாட்  பெயர்  குறிப்பிட்டு விட  வேண்டும்  என  டிஏபி  தலைமைச்  செயலாளர் லிம்  குவான்  எங்  கூறியுள்ளார்.

டிஏபி  ஆண்டுக்  கூட்டத்தில்  உரையாற்றிய  லிம், பக்கத்தான்  முக்கியமான  விவகாரங்களில்  தெளிவான  கருத்தொற்றுமை  இன்றி  தேர்தலில்  போட்டியிடுவதில்  அர்த்தமில்லை  என்றார்.

“பிரதமர்  யார்  என்பதில்  இணக்கமில்லாமலும்  ஹுடுட்  சட்டம்  இருக்காது  என்பதில்  தெளிவான  நிலையின்றியும்  பக்கத்தான்  ரக்யாட்டால்  தேர்தலில்  குதிக்க இயலாது”, என்றவர்  கூறினார்.

பக்கத்தான்  ஆட்சியைப்  பிடித்தால்  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  பிரதமராக  வேண்டும்  என்றே  டிஏபி  மொழிந்து  வந்துள்ளது.

ஆனால், பாஸ்,  அதன்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்  பிரதமராவதையே  விரும்புகிறது.