மக்களிடம் பொய் சொல்லாதீர், நஜிப்பிடம் கூறுகிறார் முன்னாள் தேர்தல் ஆணையத் தலைவர்

 

stop lying1மக்களிடம் பொய் சொல்வதை நிறுத்தி விட்டு, மாறாக அவர் “தமது வேலையைச் செய்ய வேண்டும்” என்று பெர்காசா உதவித் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் பிரதமர் நஜிப் ரசாக்கை கேட்டுக்கொண்டார்.

தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவரான அப்துல் ரஷிட் ஓர் அறிக்கையைக் குறிப்பிட்டு அந்த அறிக்கை மலேசியர்கள் தலைக்கு ரிம24,000 வருமானம் பெறுகின்றனர் என்று கூறுகிறது. அது ஒரு “பெரிய பொய்” என்றார்.

“அதனை அரசாங்கம் மலேசியர்களிடம் பெருமையுடன் கூறிக்கொள்கிறது. அது (அந்த அறிக்கை) “ஒரு பெரிய பொய்.

“நான் நஜிப்பிடம் சொல்ல விரும்புகிறேன்: நீர் மக்களிடம் பொய் சொல்ல வேண்டியதில்லை. உமது வேலையைச் செய்வீர்.

“அவரது மக்களிடமும், அனைத்து மலாய் தலைவர்களிடமும் அவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும்; பதவியில் இருந்தால் மட்டும் போதாது; அவர்களால் முடிந்ததை மட்டும் செய்ய வேண்டும் என்று அவர் (நஜிப்) கூற வேண்டும்”, என்று அப்துல் ரஷிட் இன்று (டிசம்பர் 14) பெர்காசா ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் பேசுகையில் கூறினார்.

அம்னோ பொதுக்கூட்டம் பற்றி பேசிய அவர், ஒவ்வொரு ஆண்டும் கட்சி பல்வேறு தீர்மானங்களைக் கொண்டு வருகிறது. ஆனால், பெரும்பாலானவை குப்பைத் தொட்டிக்கு போகின்றன. அவை அமல்படுத்தப்படுவதில்லை என்றும் அப்துல் ரஷிட் கூறினார்.

 

“எல்லாம் பேச்சுதான்”

 

பெர்காசாவில் சேர்ந்ததற்கான காரணத்தை விளக்கிய அவர், இந்த வலதுசாரி கூட்டத்துடன் சேர்ந்ததால் தம்மால் மக்களை சாட முடியும் stop lying2என்றார்.

“அவர்கள் என்னை எதிர்த்துக் குற்றம் சாட்ட முடியாது ஏனென்றால் எனது மடியில் ஒன்றுமில்லை. நான் மற்றவர்களின் பணத்தைத் திருடுவதில்லை”, என்றார்.

மலாய்க்காரர்களுக்கும் இஸ்லாத்திற்கும் அவர்கள் (அம்னோ) ஏதாவது செய்வார்கள் என்று எதிர்பார்த்ததாக அவர் மேலும் கூறினார்.

“அவர்கள் எதுவும் செய்யாத போதிலும், செய்வதாக கூறிக்கொள்கின்றனர். மண்டபத்தில் எல்லாம் வெறும் பேச்சுதான். மண்டபத்தை விட்டு வெளியில் வந்தவுடன், விசயமே வேறுதான்.”

பாரிசான் நேசனல் தோல்வியடைய அஞ்சியது என்று கூறிக்கொண்ட அப்துல் ரஷிட். அவர்கள் தோற்றுவிட்டதாக அக்கூட்டணி நம்புகிறது என்றார்.

“அவர்கள் தோற்று விட்டனர் என்று எந்த சோதிடர் அவர்களிடம் கூறினார் என்பது எனக்குத் தெரியாது. அவர்கள் தோற்கவில்லை ஆனால் மரண வேதனையில் இருக்கின்றனர் என்று நான் கூறினேன்”, என்றாரவர்.

இந்த நிலையில், அரசாங்கத்தை மாற்றுவதற்கு பெர்காசா ஓர் அரசியல் கட்சியாக வேண்டும்.

“பெர்காசா நாட்டை நிர்வகிக்கட்டும்”, என்று அப்துல் ரஷிட் கூறினார்.