போலீஸ் படையின் நேர்மையின்மீது மக்கள் கொண்டுள்ள எதிர்மறை கருத்தை மறுப்பதில் பயனில்லை என உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜைடி ஹமிடி கூறினார்.
போலீசில் நேர்மை என்பது உயர் அதிகாரிகளிடம் தொடங்க வேண்டும். அப்போதுதான் கீழ்நிலை அதிகாரிகளும் அதைப் பின்பற்றுவார்கள்.
“மீன், தலைப்பகுதியில்தான் அழுகத் தொடங்குகிறது. தலைவர்களாக இருக்கும் நாம்தான் நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
“இதுவரை இருந்துவந்த எதிர்மறையான தோற்றப்பாட்டை மறுத்தது போதும். கூட்டாக ஒரு கடப்பாட்டை எடுத்துக்கொள்ள வேண்டும்”, என செராசில் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்ட ஒரு நிகழ்வில் ஜாஹிட் கூறினார்,
“நாம் செய்வது மக்களுக்குத் தெரியாது என்று நினைக்க வேண்டாம்”, எனவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
உண்மையை ஒளிவுமறைவின்றி கூறிய அமைச்சருக்கு மிக்க நன்றி.
போலீஸ்துறை தனது சேவையை செம்மையுடன் செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் . ஒரு நாட்டில் போலிஸ் துறை நேர்மையுடன் பணிபுரியுமானால் நாடு நலம் பெருமாகுக . நன்றி .
ஒரு உண்மையை சொல்லிவிட்டீர் ஐயா.