அண்மையில் போலீஸ் காவலில் இருந்த தடுப்புக்கைதி ஒருவர் இறந்துபோனது பற்றிப் போலீசாரிடமிருந்து சரியான விளக்கம் கிடைக்கவில்லை என வழக்குரைஞர் கோபிந்த் சிங் ஆத்திரமடைந்துள்ளார்.
சைட் முகம்மட் அஸ்லான் சைட் முகம்மட் நவம்பர் 4-இல் போலீஸ் காவலில் இருந்தபோது இறந்தது பற்றி விளக்கம் கேட்டு போலீசுக்குக் கடிதம் எழுதியதாகவும் ஆனால், அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை என்றும் இறந்தவரின் குடும்ப வழக்குரைஞரான அவர் கூறினார்.
இன்றுவரை அதற்குப் பதில் இல்லை என்று கூறிய அவர், அது “பொறுப்பற்ற செயல்”, “வெட்கப்படத்தக்க செயல்” என்று சாடினார்.
தெரிந்தால் சொல்லுவார்கள்,
தெரிந்தும் சொல்லமாட்டர்கள்,
தெரியாததால் சொல்லவில்லை,
தெரிந்தும் தெரியாமல் இருப்பார்கள்,
தெரிந்திருந்தால் தெரியாமல் இருப்பார்கள்,
எதாவது விளங்குதா விளங்காது,
இப்படித்தான் இருக்கும் இறுதியறிக்கை.
c4 வைத்து கொன்ற அல்டந்துயா மரணத்திருக்கு யாருமே பொறுப்பாளியல்ல …. பிடிபட்டவர் , வாக்குமூலம் கொடுத்தவர் என்று பலர் இருந்தும் அல்துந்துயா கொலையாளி பிடிபடவில்லை … இது மலேசியாவின் சாதனை … போலிஸ் மௌனம் விலை மதிக்க வல்லது ..