1மலேசியா மேம்பாட்டு நிறுவன(1எம்டிபி) விவகாரத்தில் தம் நிலப்பாட்டைத் துணைப் பிரதமர் முகைதின் யாசின் எடுத்துரைக்க வேண்டுமென பாஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
நஜிப்பைத் தூக்கவும் பிரதமர் பதவியைக் கைப்பற்றவும் அவ்விவகாரத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தும் நோக்கத்தில் முகைதின் மவுனமாக இருக்கக் கூடாது என பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் மாபுஸ் ஒமார் கூறினார்.
கஜானா நேசனல் நிறுவனம் இருக்கையில் சர்ச்சைக்குரிய இந்த முதலீட்டு நிறுவனத்தைத் தொடங்க அமைச்சரவை அனுமதி அளித்தது ஏன் என்பதையும் முகைதின் விளக்க வேண்டும் என மாபுஸ் கேட்டுக்கொண்டார்.
“இவ்விவகாரத்தில் முகைதின் தம் நிலைபாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும்”, என்றாரவர்.
கேள்வி கேட்கிற முகரையை பாரு,