“அல்லா” என்ற சொல் அடங்கிய துதிப் பாடல் புத்தகங்களை வைத்திருந்த ஒரு பாதிரியாரை சட்டத்திலிருந்து அகற்றப்பட்ட ஒரு சட்டத்தின் கீழ் விசாரித்த போலீசார் ஒரு பெரும் தவறை புரிந்துள்ளனர்.
பாதிரியார் சிரில் மன்னயாகம் தண்டனைச் சட்டத் தொகுப்பு செக்சன் 298A கீழ் விசாரிக்கப்பட்டார் என்று ஜொகூர் மாநில போலீஸ் கூறியது.
ஆனால், அந்தச் சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று 1988 இல் அறிவிக்கப்பட்டு அகற்றப்பட்டது என்று வழக்குரைஞர் என்ரூ கூ மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
மாமாட் பின் டாவுட்டுக்கும் மலேசிய அரசாங்கத்திற்கும் இடையிலான (1988) வழக்கில் அன்றைய உச்சநீதிமன்றம் (Supreme Court) தண்டனைச் சட்டத் தொகுப்பு செக்சன் 298A அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று தீர்ப்பளித்தது.
செக்சன் 298A இன் கீழ் தடுத்து வைப்பது அல்லது பறிமுதல் செய்தல் போன்ற நடவடிக்கைகள போலீசார் எடுக்க முடியாது ஏனென்றால் அது சட்டவிரோதமானதாகும் என்று கூ கூறினார்.
அந்த செக்சன் தண்டனைச் சட்டத் தொகுப்பிலிருந்து அகற்றப்பட்டு விட்டதால் சட்ட நுணுக்கப்படி அது நடப்பில் இல்லை என்று கூ மேலும் கூறினார்.
பாதிரியார் சிரிலின் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக அவர் டிசம்பர் 5 இல் தடுத்து வைக்கப்பட்டார், “Mari Kita Memuji Allah Kita” என்ற தலைப்பைக் கொண்ட அவருக்கு சொந்தமான 31 துதிப் பாடல் புத்தகங்களையும் அவரிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் தவறு செய்து விட்டனர். அதன் பின்னர் அவர்கள் இந்த விவகாரத்தில் முனைப்பு காட்டக்கூடாது என்று கூ கூறினார்.
ku…..ng ajar ……
வாழ்க ஜனநாயகம்,
வாழ்க PDRM,
பாவம் மக்கள்,
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் என்ற கோட்பாட்டுக்கு தப்பாமல் நடைமுறை படுத்துகிறார்கள்.
……………………..இந்த காரியத்தை செய்தவர்களை நீதி மன்றத்தில் நிறுத்த வேண்டும் …. பிறகு காவல் துறைக்கு களங்கம் எற்படுதியற்கு பணி நீக்கம் செய்யவேண்டும் … இது சாத்தியமே ….. ஐ ஜி பி செய்வாரா … தவறினால் மக்கள் போர் தொடுக்க வேண்டும் …..
ஒருவனே அண்டசராசரங்களுக்கும் இறைவன் என்றால் அவனுக்கு ஏன் திருநாமம்?. அந்த ஒரு பெயருக்காக ஏன் இருவர் சிண்டுப் பிடித்து சந்தி சிரிக்க அடித்துக் கொள்ள வேண்டும்?. மதத்தை விட்டு கொஞ்சம் பகுத்தறிவால் சிந்தித்து நடந்தால் மற்றவர்கள் தாலி அறாது!. சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திப்பார்களாக. .
இன்று மதபோதர்கள்தான் நல்ல பணம் சம்பாதிக்கின்றனர்… பின்பு ஏன் கடவுளை கூறு போட்டு விற்க மாட்டார்?? அன்பே கடவுள் மாறி காசேதான் கடவுளடா என்றாகிவிட்டது…..
நன்றாகச் சொன்னீர் சிவதர்மரே.
சட்டம் நாங்கள் போட்டது அப்பு..எப்போ வேணாலும் வெச்சிக்குவோம்
இந்து மதத்தை மட்டும் குறி வைத்து தாக்கி பகுத்தறிவு பேசும் மூடர்கள்..இந்த கேடு கேட்ட அறியாமை குணத்தை தட்டி கேட்க முயல்வார்களா ?? ஏன் ? வழக்குகள் வந்து பாயும் என்ற பயமா ??
இந்து மதத்தை குறி வைத்து தாக்கி பேசும் நாத்திகர்கள் மூடர்கள் அல்ல .நாலும் தெரிந்த பகுத்தறிவாளிகள் ,தங்கள்
மதத்தில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும் என்று
அவர்கள் பாடு படுவதற்கு காரணம் எல்லோரும் சமமாக
தாழ்வு பேதமின்றி ஒரே இனமாக வாழவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் அவர்கள் பகுத்தறிவு சிந்தனையை பரப்பி வருகிறார்கள் , அவர்கள் மற்ற மத்ததை பற்றி பேசாமல் இருப்பதிலிருந்து inthudharman க்கு தெரியவில்லையா பகுத்தறிவாளர்கள் ஒழுக்கமானவர்கள்
என்பது .நைனா