அம்னோ உச்சமன்ற உறுப்பினர் முகம்மட் புவாட் ஜர்காஷி, பிகேஆர் முன்னாள் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தம்மை அணுகி, கட்சிமாறி எதிரணியை ஆதரிக்குமாறு கேட்டுக்கொண்டார் என கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று கூறினார்.
அப்போது தைவானில் 30 பிஎன் எம்பிகளுடன் ஒரு தங்குவிடுதியில் இருந்ததாகவும் பின்னிரவு மணி 2 வாக்கில் சைபுடின் தம்மைத் தொடர்புகொண்டதாகவும் புவாட் தெரிவித்தார்.
புவாட், வெலியுறவு அமைச்சர் அனிபா அமானுக்கு எதிராக அன்வார் இப்ராகிம் தொடுத்துள்ள ரிம100 மில்லியன் அவதூறு வழக்கில் சாட்சியளித்தார்.
“நான் பிஎன்னுக்குத்தான் விசுவாசமாக இருப்பேன் என்றும் என்னையோ என்னுடன் இருந்த 10 எம்பிகளையோ அவரால் கவர்ந்திழுக்க முடியாது என்றும் அவரிடம் தெரிவித்தேன்”, என்றாரவர்.
விஞ்ஜானம் வளந்த காலத்தில் ஏன் இந்த உரையாடலை நீங்கள் உங்கள் தொலை பேசியில் பதிவு செய்ய வில்லை?சரி மறந்து விட்டார்…