‘மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் பிசினஸ் ரேடியோ நிலையத்துக்கு ரிம10,000 அபராதம் விதித்துள்ளது.
2013, அக்டோபர் 21-இல் இஸ்லாமிய கல்விமான் ரேஸா அஸ்லானின் நேர்காணலை ஒலியேற்றியதற்காக இந்த அபராதம். அந்நேர்காணலில் ரேஸா, மலேசியாவில் முஸ்லிம்-அல்லாதார் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதைக் குறை கூறியிருந்தார்.