ஜோகூரில் கத்தோலிக்க பாதிரியாரிடமிருந்து துதிப்பாடல் நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பில் உள்துறை அமைச்சர் அஹ்ட் ஜாஹிட் ஹமிடியும் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் (ஐஜிபி) காலிட் அபு பக்காரும் வாயை மூடிக் கொண்டிருப்பது ஏன் என்று டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் வினவுகிறார்.
“அவர்களின் அதிகாரத்துக்கு உள்பட்ட விவகாரங்களில் உடனே கருத்துச் சொல்பவர்கள் இவ்விவகாரம் பற்றி 10 நாள்களாக எதுவும் கூறாதிருப்பது ஆச்சரியமளிக்கிறது”, என்று லிம் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
சமய உணர்வுகளை மதிப்பதற்குக் கற்றுத்தரும் பயிற்சிக்குப் போலீசாரை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் லிம் கூறினார்.
கடுமையான மௌன விருதாமோ ?????/
இன்னும் 10 ஆண்டுகளில் இந்நாட்டு முஸ்லிம் அல்லாதார்கள் படு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவர்.
வருஷ லீவுக்கு ஆயிதமாக இருப்பவர்களை வம்பில் மாட்டிவிட்டார்கள் ஐ ஜி பி யின் இளசுகள் ……. பாதிக்கப்பட்டவர்கள் விரைவுடன் பொலிசில் புகார் கொடுத்தால் எல்லாம் உடனே நடக்கும் !