எம். இந்திரா காந்தியின் பிள்ளையைக் கண்டுபிடித்து அவரிடமே ஒப்படைக்க வேண்டும் அத்துடன் பிள்ளையைத் தூக்கிச் சென்ற அவரின் மதம் மாறிய முன்னாள் கணவரைக் கைது செய்ய வேண்டும் என்ற ஈப்போ உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ்(ஐஜிபி) காலிட் அபு பக்கார் செய்திருந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்றம் உயர்நீதிமன்ற உத்தரவைத் தள்ளுபடி செய்தது.
மேல்முறையீட்டை விசாரித்த மூவரடங்கிய நீதிபதிகள் குழு 2க்கு 1 என்ற பெரும்பான்மை முடிவில் காலிட்டுக்குச் சாதகமாக தீர்ப்பளித்தது.
நீதிபதிகள் அப்துல் அசீஸ் அப்ட் ரஹ்மானும் அஹ்மடி அஸ்நாவியும் காலிட்டின் முறையீட்டை ஏற்றுக்கொண்டனர். நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் மட்டும் அதை ஏற்கவில்லை.
இதனிடையே, இதே முறையீட்டு நீதிமன்றம் இன்னொரு வழக்கில் மதம் மாறிய இஸ்வான் அப்துல்லா, குழந்தைகளை தன் முன்னாள் இந்து மனைவி எஸ்.தீபாவிடம் ஒப்படைக்க வேண்டும் என சிரம்பான் உயர் நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்புக்கு எதிராக செய்திருந்த மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தது.
வழக்குச் செலவாக ரிம10,000 கொடுக்குமாறும் அது உத்தரவிட்டது.
சிவில் நீதிமன்றத்தில் முறைப்படி செய்துவைக்கபட்ட ஒரு திருமணத்தைக் கலைக்கும் அதிகாரம் ஷியாரியா நீதிமன்றத்துக்கு இல்லை என மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
“முறையீட்டை இரத்துச் செய்கிறோம். குழந்தைகளை யார் பொறுப்பில் ஒப்படைப்பது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் சிவில் உயர் நீதிமன்றத்துக்கு உண்டு”, என மூவரடங்கிய நீதிபதிகள் குழுவுக்குத் தலைமை தாங்கிய அப்துல் அசீஸ் தீர்ப்பில் கூறினார்.
எல்லாம் நாடக மேடை , இதில் எங்கும் மடையர்கள் கூட்டம்…..!
குளறுபடியான தீர்ப்பு. ஒரே நீதிமன்றத்தில் வெவ்வேறான சட்ட சிக்கல்கள் கொண்ட தீர்ப்புகள். உலகில் வேறெந்த நீதிமன்றத்திலும் இந்த இரட்டை வகை தீர்ப்புகளை எதிர் பார்க்க முடியாது.மலேசியா நீதிமன்றத்தில் தவிர.இனத்தைப் பார்த்து தீர்ப்பு சொல்வது நகைப்புக்குரிய விஷயம்.
மலாய்க்கார நீதிபதிகளிடம் இருந்து நீதியை எதிர் பார்க்க முடியாது–இதை நான் முன்பே கூறி இருந்தேன் . அத்துடன் இக் காலகட்டத்தில் எத்தனை மலாய்காரன் அல்லாத நீதிபதிகள் நீதி மன்றத்தில் இருக்கின்றனர்? எதெல்லாம் காகாதிர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
சிவில் முறைப்படி விவாகரத்து செய்துகொண்டவர்கள் இல்லா விசயங்களையும் சிவில் முறைப்படி முடிவுக்கு கொண்டுவரவேண்டும் .. பிறகு விருப்பப் படி எவளையும் கல்லியாணம் பணிக்கிட்டு போயி தொலையவேய்டியது தானே …. விவாகரத்து வாங்காம மறு கல்யாணம் முடியாது தானே ….வேற ஒருத்தியை தேடி போரவனுங்களுக்கு எதுக்குடா புள்ளகுட்டி … அதலவேற மத மாற்றம் செய்றானுங்க …. போதாத குறைக்கு முனியாண்டிக்கு பிள்ளையா பொறந்தவன் மதம் மாறி அப்பா பெயரையே மாதிவைக்கறான் ….. அப்பா பிள்ளைக்கு பெயர் வெச்ச காலம் மாறி இப்போ மதம் மாறிய அறிவு கேட்ட பிள்ளை பெத்த அப்பனுக்கு கொட்டும் பெயர் அப்துல்லா …..
இந்த பெண்கள், கணவரின் குடும்பத்துடன் அனுசரித்து போவதில்லை. தங்கள் இஷ்டபடி நடந்து கொள்வது. இதை கணவர் கண்டித்தால் உடனே பிள்ளையை தூக்கி கொண்டு தாய் வீட்டுக்கு செல்வது. அம்மாவுக்கு மட்டும்தான் பிள்ளை பாசமா?? அப்பனுக்கு இல்லயா?? ஆனால் சட்டம்.. பெண்களுக்கு சாதகம். வேறு வழி ??