அண்மைய அம்னோ பேரவையில், அம்னோ பேராளர்கள் தேச நிந்தனைக்குரிய கருத்துகளை மொழிந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள்மீது தேச நிந்தனைச் சட்டம் பயன்படுத்தப்படும் என்று உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி வான் ஜப்பார் கூறினார்.
“அவர்கள் தவறு செய்திருந்தால், போலீஸ் நடவடிக்கை எடுக்கும். மற்றவர்களிடம் நடந்துகொள்வதைப்போலவே அவர்களிடமும் நடந்துகொள்வார்கள்”, என்றாரவர்.
அம்னோ கூட்டத்தில் முன்னாள் துணை அமைச்சர் மஷிடா இப்ராகிம், கெடாவில் சீனர்கள் குர்ஆனை எரித்ததாகக் கூறி ஒரு சர்ச்சையை உண்டுபண்ணினார். பின்னர் அது உண்மை இல்லை என்பது தெரிய வந்தது.
பினாங்கு அம்னோ பேராளர் சைடி முகமட் இன்னொரு சர்ச்சையைக் கிளப்பினார். பினாங்கில் உள்ள சீனர்கள் ஒழுக்கம் கெட்ட நடவடிக்கைகள் ஈடுபட்டதால்தான் பணக்காரர்களானார்கள் என்றவர் கூறினார்.
நல்லாத்தான் பேசக் கத்துக் கிட்டீங்க, ஆனா, செயலடுத்தத் தான் மாட்டேங்குறீங்க.
அம்னோ பேராளர்கள் தேசநிந்தனை தூண்டும் வண்ணம் யாருமே பேசவில்லை..? பிறகு ஏன் அவர்கள் மீது நடவைக்கை…? இப்ராஹிம் அலி போன்றோர் நல்ல மனிசனை பார்க்க முடியுமா..?
அரசியல்ல இதெல்லாம் சாதாரனப்பா…
எது சாதாரணம் அக்கா சாந்தி..இதுவே நம்மினத்தைச் சார்ந்தவர் உண்மையைக் கூறி இருந்தால் இன்னேரம் தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் கைதாகியிருப்பார்.அம்னோ பேராளர்கள் பேசியது அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்த வெட்டவெளிச்சமான உண்மையாகும்.பிறகு எதை இவர்கள் கண்டுப்பிடிக்கப் போகிறார்களாம்.இன்று சீனர்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று கூறியவர்கள் நாளை நம்மினத்தையும் கூறுவர்.அப்போதும் சாதாரணம் என்பீரோ.உம்மை போன்ற ஆட்கள் எல்லாம் இச்சமுதாயத்தில் சாபங்கள்.
என்னா பெசுனான்கள் உனக்கு தெரியாத உலராத !!!!!!!!!!!!!!!!!!!!!!!