பாஸ்: ஹுடுட்டை கொண்டுவர அம்னோவின் துணை தேவை

amarபாஸ்  கட்சி,  ஹுடுட்டைக்  கொண்டுவர  அதன்  ஜன்ம  வைரியான  அம்னோவின்  உதவி  கண்டிப்பாக  தேவை  என்கிறது.

அம்னோவின்  உதவியின்றி  கிளந்தானில்  ஹுடுட்  சட்டம்  கொண்டுவருவது  இயலாத  ஒன்று என கிளந்தான்  துணை  மந்திரி  புசார்  முகம்மட்  அமார்  நிக்  அப்துல்லா  கூறினார்.

ஹுடுட் விசயத்தில்  தன்  தோழமைக்  கட்சிகளான  டிஏபி, பிகேஆர்  ஆகியவற்றின்  ஆதரவு  இல்லை  என்கிற  நிலையில்  பாஸ் இப்போது  பிஎன்னைதான்  நம்பியுள்ளது. நாடாளுமன்றத்தில்  ஹுடுட்மீது  தனி  உறுப்பினர்  சட்டவரைவு  ஏற்கப்படுவதற்கும்  பிஎன்  உதவ  வேண்டும்  என்றாரவர்.

அம்னோவின்  உதவியை  எதிர்பார்க்கும் பாஸ், அம்னோவில்  அல்லது பிஎன்னில்  இணையும்   சாத்தியம்  உண்டோ?  அந்தப்  பேச்சுக்கே  இடமில்லை  என்று  மாநில  பாஸ்  துணை ஆணையருமான  அமார்  கூறினார்.

“அம்னோவுடன்  கைகோக்க மாட்டோம்- இரண்டாவது  தடவையாக  அம்னோ  விரிக்கும்  வலையில்  விழ  மாட்டோம். ஒருமுறை பட்டது  போதும்”, என்றார்.

மலேசியாகினிக்கு  வழங்கிய  நேர்காணலில்  அமார்  இவ்வாறு  கூறினார்.