டாக்டர் மகாதிர் முகம்மட் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் குறைகூறுவதை “ஆக்கப்பூர்வமான அறிவுரையாக”த்தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் பண்பாட்டு, சுற்றுலா அமைச்சர் நஸ்ரி அசீஸ்.
மகாதிர் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர். நாட்டு நடப்புகளில் அக்கறை கொண்டவர் என்றாரவர்.
“அக்கறை இருப்பதால்தான் அவர் குறைகூறுகிறார். பிடிக்கவில்லை என்பதால்தான் அவர் குறை சொல்வதாக நினைக்கக் கூடாது.
“மகாதிருக்கு நஜிப்பைப் பிடிக்கும் என்பது எனக்குத் தெரியும். என்னைவிட நஜிப்பை அவருக்கு அதிகம் பிடிக்கும்”,என்று நஸ்ரி கூறினார்.
அவரது குறைகூறல்களை ஆக்கப்பூர்வமான அறிவுரைகளாக எண்ணிக் கடுமையாக உழைக்க வேண்டும் என நஸ்ரி சொன்னார்.
அடுத்த பிரதமர் நஸ்ரியோ …முன்பெல்லாம் மகாதீரை வெறுத்து அடுத்த MP கு கூட போட்டி இட மாட்டேன் என்ற நஸ்ரியா சொல்கிறார். அரசியலுக்கு இப்போதெலாம் 1008 பூஜை பண்ணலாம். எதாச்சும் ஒன்னு வெடிக்கும்.
வெண்ணையைப் போட்டு தடவி விடுவதாக என்னமோ?.
எல்லாம் அதே குட்டையில் ஊறிய மட்டைகள் — அதுவும் நாறிப்போன குட்டையில். இதற்க்கு பிறகும் சொல்ல வேண்டுமா?
மகாதீர் நாட்டு நடப்புகளை தொட்டு பேசுவதற்கும் ஏசுவதற்கும் எல்லா உரிமை இருந்தாலும் இனரீதிலான சிண்டு முடித்து விடும் பேச்சுக்களை குறைத்துக் கொண்டால் நல்லது..!
மகாதிர் சொல்லுவதை சரியாக புரிந்து கொண்டால்,
எல்லாம் சரியாக புரியும்.