இஸ்மா: மரினா ஹுடுட்-டுக்கு பயப்படுவானேன்?

ismaஹுடுட்  சட்டம்  எல்லா  மக்களையும், முஸ்லிம்-அல்லாதார் உள்பட,  பாதுகாக்கிறது , அப்படியிருக்க  மரினா  மகாதிர்  ஏன் அதைக்  கண்டு  பயப்பட  வேண்டும்  என்று ஈக்காத்தான்  முஸ்லிமின்  மலேசியாவின்  மகளிர்  பகுதி   (வனிதா  இஸ்மா)  வினவுகிறது.

ஹுடுட்  சட்டம்  குற்றவாளிகள்மீது  மட்டும்தான்  அமல்படுத்தப்படும்  என  வனிதா  இஸ்மா  தலைவர் நோர்சலேகா  முகம்மட்  சாலே கூறினார்.

“ஒருவர்  கூடா  உறவில்  ஈடுபடவில்லை, திருடவில்லை, கொள்ளையடிக்கவில்லை, கொலை  செய்யவில்லை  என்கிறபோது  எதற்காகக்  கவலைப்பட  வேண்டும்?”. ஹுடுட்  சட்டத்துக்கு  எதிர்ப்புத்  தெரிவிக்கும்  மரினாவை  நோக்கி  நோர்சலேகா இவ்வாறு  வினவினார்.

முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டின்  மகளான  மகாதிர்,  ஹுடுட்  கிளந்தானில்  ஹுடுட்  கொண்டுவரப்படக்கூடாது  என்று  அண்மையில்  கூறியிருந்தார். அது  நாட்டைப்  பிளவுபடுத்தும்  என்றும்   முஸ்லிம்- அல்லாதாரும்கூட  ஹுடுட்  சட்டத்தின்கீழ்  முஸ்லிம்கள்  தண்டிக்கப்படுவதைக்  காண  விரும்ப  மாட்டார்கள்  என்றாரவர்.

அதற்குப்  பதிலளித்த  நோர்சலேகா, மரினா பொதுமக்களின்  நலனையும்  எண்ணிப்பார்க்க  வேண்டும்  என்றார்.