அமைச்சரின் வாழ்த்தும் வசவும்

dahlanகிறிஸ்மஸ்  பண்டிகையின்போது  முஸ்லிம்கள்  கிறிஸ்வர்களுக்கு  வாழ்த்துச்  சொல்லக்  கூடாது  என்று  கூறியுள்ள  ஈக்காத்தான்  முஸ்லிமின்  மலேசியா(இஸ்மா)வை  வீடமைப்பு, ஊராட்சி, நகர்ப்புற  நல்வாழ்வு  அமைச்சர்  அப்துல் ரஹ்மான்  டஹ்லான்  கடுமையாக  சாடியுள்ளார்.

இன்று காலை,  டிவிட்டரில்  கிறிஸ்துவர்களை  வாழ்த்திய  அந்த  கோட்டா  பெலுட்  எம்பி, இஸ்மாவை  வசை  பாடினார்.

“கிறிஸ்துவர்களுக்கு  மகிழ்ச்சி  பொங்கும்  கிறிஸ்மஸ்  வாழ்த்துகள். இவ்வாண்டு  மிகப்  பெரிய  அளவில் கிறிஸ்மஸ்  கொண்டாட்டத்தை  நடத்தப்  போகிறேன்”, என்று  டஹ்லான்  கூறினார்.

“இஸ்மா  என்  குரலல்ல. அது  என்னையோ  மில்லியன்  கணக்கான  முஸ்லிம்களையோ  பிரதிநிதிக்கவில்லை. மதவெறிக்கு  மலேசியாவில்  இடமில்லை”, என்றாரவர்.

சாபாவில்  முஸ்லிம்கள்  முஸ்லிம்- அல்லாதாருக்குக்  கொடுக்கும்  மரியாதையை இஸ்மாவால்  “புரிந்துகொள்ள  இயலாது”, என்பதை  அமைச்சர்  சுட்டிக்காட்டினார்.

“அதனால்  இங்கே மூக்கை  நுழைக்காதே”, என்றவர்  எச்சரித்தார்.