1எம்டிபி: எங்களின் பணம் மக்களின் வரிப்பணம் அல்ல

1mdbதன்  நிதி  நிலவரத்தைத்  தற்காக்கும்  முயற்சியில்  குதித்துள்ள  நிதி  அமைச்சுக்குச்  சொந்தமான  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம்(1எம்டிபி), தனது  பல-பில்லியன் மதிப்புள்ள  முதலீட்டில்  ரிம1 மில்லியன்  மட்டுமே  அரசாங்கம்  வழங்கிய  தொகையாகும்  என்று  கூறியது.

பிரதமர்  நஜிப் அப்துல்  ரசாக்கைத்  தலைவராகக்  கொண்ட  அந்நிறுவனம்  கடன்  தொல்லைகளில்  சிக்கிக்  கொண்டிருப்பதால்   கண்டனத்துக்கு இலக்காகியுள்ளது. அதன் கடன்களில் சில  அரசாங்க  உத்தரவாதம்  பெற்றவை.

அதன்  இயக்குனர்  லோடின்  வொக்  கமருடின்,  இன்று ஓர்  அறிக்கையில்  நிறுவனம்  தொடக்கப்பட்டபோது பெற்ற  ரிம1 மில்லியன் மட்டுமே  நிதி  அமைச்சிடமிருந்து  கிடைத்த  நிதியுதவி  ஆகும்  என்றார்.

மற்றவை  அனைத்துலக நிதிதிரட்டும்  நடவடிக்கைகள்  மூலமாகப்  பெறப்பட்டவை.

“1எம்டிபி  அரசாங்கத்திடமிருந்து  நிதியுதவியைப்  பெற்றுக்கொண்டிருக்கவில்லை. என்பதால்  அது  அரசாங்கத்தின்  பணத்தை  அல்லது  மக்களின்  பணத்தை  வீணாக்குகிறது  என்று  கூறுவது  நியாயமல்ல”, என்றாரவர்.