அமைச்சர்: எப்ஜிவி பங்கு விலை குறைந்ததற்கு பெல்டா காரணமல்ல

fgvபெல்டா  குளோபல்  வெண்ட்சர்ஸ்   ஹொல்டிங்ஸ்(எப்ஜிவி)-இன்  பங்கு  விலை  குறைந்ததற்கு அந்நிறுவனத்தைக்   குறை  சொல்வது  சரியல்ல  எனப்  பிரதமர்  துறை  துணை  அமைச்சர்  ரசாலி  இப்ராகிம்  கூறினார்.

பெட்டாலிங்  ஜெயா உத்தாரா  எம்பி  டோனி  புவா  உள்பட  பலரும் பெல்டா  நிர்வாகமே  அதற்குக்  காரணம்  என்று  கருத்துத்  தெரிவித்திருப்பதை  அடுத்து  அவர்  இவ்வாறு  கூறினார்.

உலகளவில்  எண்ணெய்  விலை  குறைந்ததுதான்  அதற்குக்  காரணம்  என்றாரவர்.

“அதன்(எப்ஜிவி) தொழிலில் 75 விழுக்காடு  செம்பனை  எண்ணெயை  அடிப்படையாகக்  கொண்டது. அது  விலை  குறையும்போது  எப்ஜிவி(பங்கு) விலையும்  பாதிக்கப்படுகிறது”, என  ரசாலி  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.