கிறிஸ்மஸ் காலத்தில் பயங்கரவாதிகள் மலேசியாவில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகக் கூறும் வதந்தியை நம்ப வேண்டாம் என போலீஸ் கூறியது.
வாட்ஸெப் சமூக வலைத்தளத்தில் அப்படி ஒரு வதந்தி உலா வருவதாக இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் செயலக (நிறுவனத் தொடர்பு) உதவித் தலைவர் அஸ்மாவதி அஹ்மட் கூறினார்.
“விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிர்க்க இப்போதைக்கு வர்த்தக மையங்களுக்கும் பொது இடங்களுக்கும் செல்ல வேண்டாம் என அது மக்களைக் கேட்டுக்கொள்கிறது.
“இவ்விவகாரம் தொடர்பில் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்திருப்பதாகவும் மக்கள் கவனமாக இருக்க வேண்டுமெனவும் அது குறிப்பிடுகிறது”, என்றாரவர்.
அந்த வதந்தியை நம்ப வேண்டாம் என்றும் அப்படிப்பட்ட பொய்யான தகவலை மற்றவர்களுக்குப் பரப்ப வேண்டாம் என்றும் அஸ்மாவதி கேட்டுக்கொண்டார்.
-பெர்னாமா
நஜிப் பிரதமராக இருக்கும் காலகட்டத்தில் எல்லாமே நடக்க வாய்ப்பு உண்டு என்பதே மெய் . நான்கு வருட காலமாக இவன் தன்னை தட்காதுகொள்ள அல்லா பிரச்னை அம்பிகா பிரச்னை அன்வர் பிரச்னை ஹுடுத் கு அதரவு கொடுப்பதாக ஆரம்பித்த பிரச்னை நம் நாட்டிலே தீவிரவாதிகள் நுழைவு bom வெடிப்பு விமானம் காணமல் போனது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது நாடிலே பன்றி தலைகள் masjiddil போடா சொன்னது குரானை எரிக்க சொல்லி பலி dap மேல் போட சொன்னது சீன மக்களையும் தமிழ் மக்களையும் perkasa isma மூலமாக சீண்டி பார்க்க சொன்னதிளிரிந்து பார்க்கும்போது எதுவும் நடக்கலாம் என்பதே மக்களின் பொதுவான கருத்து
அம்னோ மாநாட்டில் நம் …
வதந்தியா இருந்தால் நல்லது
நம் நாட்டைப் பொறுத்தமட்டில் வதந்தி என்றும் எதுவும் இல்லை.