மசீச: ஹுடுட் சமய ஒதுக்கல் கொள்கைக்கு இட்டுச் செல்லலாம்

mcaகிளந்தானில்  ஹுடுட்  அமலாக்கப்படுவது  1960-களில்  தென்னாப்ரிக்காவில்  நிலவிய  இன ஒதுக்கல் கொள்கை  போன்ற ஒன்றை  உருவாக்கி விடலாம்  என  அம்மாநில  கிளந்தான்  அச்சம்  தெரிவித்துள்ளது.

“ஹுடுட்  செயல்படுத்தப்படுவது  வெவ்வேறு  மக்களுக்கு  வெவ்வேறு  சட்டங்கள்  என  முஸ்லிம்களையும்  முஸ்லிம்- அல்லாதாரையும்  மேலும்  பிரித்து வைக்கும்.

“இதை 1960-களில்  தென்னாப்ரிக்காவில் நிலவிய  இன ஒதுக்கல்  கொள்கை  போன்ற  ஒன்றாகக்  கருதலாம். இது இனம் சம்பந்தப்பட்டதாக  இல்லாமல்  சமயம்  சம்பந்தப்பட்டதாக  இருக்கிறது”, என மாநில  மசீச  தொடர்புக்  குழுச்  செயலாளர்  லுவா  சூன்  ஹன்  கூறினார்.