சீருடையற்ற நிலை ஏழை-பணக்காரர் என்ற பிரிவினையை உண்டுபண்ணும்

uniform for studentsகல்வி  அமைச்சு  ஆறாம் படிவ  மாணவர்கள் சீருடை  அணிய விரும்பாவிட்டால்  வேறு உடைகளை  அணிந்து வர  அனுமதி  அளித்திருப்பதை  மஇகா  தலைவர்  ஒருவர்  குறை  கூறினார்.

இதனால்  கல்வியின்  தரம் ஒன்றும்  உயரப்போவதில்லை  என அதன்  இளைஞர்  தலைவர்  சி.சிவராஜா  கூறினார்.

“இந்நடவடிக்கை  பணக்கார  ஏழை  மாணவரிடையே  பிரிவினையைத்தான்  உண்டுபண்ணும். பணக்கார  மாணவர்கள்  விலையுயர்ந்த உடைகளை  அணிந்து பகட்டுக் காண்பிப்பார்கள். ஏழைகள்  தாழ்வு மனப்பான்மையால்  பாதிக்கப்படுவர்.

“அது  ஏழை  மாணவரின்  கல்வியையும்  பாதிக்கும்”, என்றவர்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

இது  ஒரு  “மோசமான  யோசனை”  என்று  வருணித்த  சிவராஜா  இதனால்  பல  கட்டொழுங்கு பிரச்னைகளும்  ஏழலாம்  என்றார்.

மேலும், ஆடம்பர  உடைகள்  கேட்டு  மாணவர்கள்  அடம்  பிடித்தால்  அது  பெற்றோருக்கு  கூடுதல்  தொல்லையாக  அமையும்.

மாணவர்கள், குறிப்பாக  மாணவிகள்  நாளை  என்ன  அணியலாம்  என்ற  சிந்தனையிலேயே  பெரும்பகுதி  நேரத்தைக்  கழிக்கின்ற  நிலையும்  உண்டாகலாம்  என்றாரவர்.