துருன் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு இடையூறு செய்யாது

turunபுத்தாண்டுக்கு  முந்திய  இரவு  டட்டாரான்  மெர்டேகாவில் நடக்கும்  தங்கள்  பேரணியால்,  அதே  இடத்தில்  நடக்கும்  இஸ்லாமிய  நிகழ்வுக்கு  எவ்வித  இடையூறும் இருக்காது  என  கெராக்கான்  துருன்  கோஸ்  சாரா  ஹிடுப் (துருன்) கூறுகிறது.

அப்பேரணியின்  நோக்கம்   பெட்ரோல்  விலையைக் குறைக்க  வேண்டும்  என  அரசாங்கத்துக்குக்  கோரிக்கை  விடுவதுதானே  தவிர  கோலாலும்பூர்  மாநகராட்சி  மன்ற(டிபிகேஎல்)த்துடன்  கூட்டாக  நடத்தப்படும்  மாலாம்  சிந்தா ரசூல்  நிகழ்வுக்கு  இடையூறு  செய்வதல்ல  என  துருன்  தலைவர்  அஸான்  சபார்  கூறினார்.

“எங்கள்  திட்டப்படி  டட்டாரான்  மெர்டேகாவில்  கூடுவோம். டட்டாரான்  மெர்டேகா  டிபிகேஎல்-லுக்குச்  சொந்தமானதல்ல. அது  மலேசிய  மக்களுக்குச்  சொந்தமானது”, என்றாரவர்.

ரிம 1.90  என்று  அழைக்கப்படும்  அப்பேரணிக்கு  10,000  பேர்  வருவர்  என அவர்  எதிர்பார்க்கிறார்.

துருன்,  இப்போது  ரிம2.26க்கு  விற்கப்படும்  பெட்ரோலை  அரசாங்க உதவித்தொகை  மறுபடியும்  அறிமுகப்படுத்தப்பட்டு  ரிம 1.90-க்குக்  குறைக்க  வேண்டும்  என வலியுறுத்தி  வருகிறது.