வெள்ள நிலவரம் மோசமடைந்துள்ளது. இன்று காலை ஆறு மாநிலங்களில் 58,705 பேர் துயர்துடைப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
கிளந்தானில்தான் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 24,765 பேர். அதற்கு அடுத்து திரெங்கானு (21,606), பகாங் (10,825), பேராக் (1,030), சாபா (336), பெர்லிஸ் (143).
கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்றிரவு 3,164-இலிருந்து 21,601 ஆக உயர்ந்தது. இதனால் கூடுதலாக 18 துயர்துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டன. இப்போது மொத்தம் 114 மையங்கள் அம்மாநிலத்தில் உள்ளன.
அம்மாநிலத்தில் எட்டு மாவட்டங்களில் 23 சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன. 17 சாலைகளில் எந்த வாகனமும் செல்ல இயலாது. ஆறில் கனரக வாகனங்கள் செல்லலாம். இலகுரக வாகனங்கள் செல்ல இயலாது.
கடல்பெருக்கும் ஏற்பட்டதால் வெள்ள நிலை, குறிப்பாக கடலோரப் பகுதிகளில், மோசமடைந்திருப்பதாக திரெங்கானு தேசிய பாதுகாப்பு மன்றம் கூறியுள்ளது.
திரெங்கானுவில், ஆறு பெரிய ஆறுகளில் நீர்மட்டம் அபாய எல்லையைத் தாண்டி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது நஜிப் அரசாங்கத்துக்கு இறைவன் கொடுத்த தண்டனை இன்னும் இருக்கு நிறைய BN அனுபவிக்கபோரணுங்க