மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி), சரவாக்கில் ரிம119 மில்லியன் மதிப்புள்ள சாலை அமைக்கும் குத்தகை வழங்கப்பட்டதில் ஊழல் நிகழ்ந்திருப்பதாக டிஏபி எம்பி சோங் சியாங் ஜென் கூறுவதை வைத்து நடவடிக்கை எடுக்க இயலாது என நேற்று தெரிவித்தது.
பண்டார் கூச்சிங் எம்பியான சோங் வழங்கிய தகவல் நடவடிக்கை எடுப்பதற்குப் போதுமானதல்ல என்று எம்ஏசிசி துணைத் தலைவர் முகம்மட் ஷுக்ரி அப்துல் கூறினார்.
“அரைகுறை தகவலை வைத்து நடவடிக்கை எடுக்க இயலாது. அது பற்றிக் கூடுதல் தகவல் இருந்தால் அவர் எம்ஏசிசி-இன் விசாரணைப் பிரிவு இயக்குனரைத் தொடர்பு கொள்ளலாம்”, என ஷுக்ரி ஓர் அறிக்கையில் கூறினார்.
எம்ஏசிசி தம்மைச் “சிக்க வைக்கப் பார்க்கிறது” என சோங் கூறிக்கொள்வதையும் அவர் மறுத்தார்.
“எந்தப் புகார்தாரரும் தகவலைப் பொதுவில் வெளியிடாமல் எம்ஏசிசி-இடம் நேரடியாக தெரிவிப்பாரானால் அவர் 2010 தகவலளிப்போர் பாதுகாப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்படுகிறார்”, என்றும் ஷுக்ரி சொன்னார்.
தக்க சான்றுகளோடு குற்றம் சுமத்தினாலும் நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துவிடவா போகிறிர்கள். !