போலீஸ்: தேவாலயம் தாக்கப்பட்ட செய்தி பொய்யானது

churchகோலாலும்பூரில், ஜாலான் ராஜா  லாவுட்-இல் ஒரு தேவாலயம்   தாக்கப்பட்டதாக ஒரு  பொய்யான  செய்தி   முகநூலில் வலம்  வந்து கொண்டிருப்பதாக  போலீஸ் கூறியது.

அச்செய்தியைப்  பரப்பியவர்மீது  போலீஸ்  நடவடிக்கை  எடுக்கும்  என   போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்  கூறினார்.

“அது  உண்மை அல்ல. அம்முகநூல்  உரிமையாளர்மீது  நடவடிக்கை  எடுக்கப்படும்”, என்றாரவர்.

‘Ayahnda Raja Provokasi’ என்ற  பெயரில்  அச்செய்தி  பதிவிடப்பட்டிருக்கும்  அச்செய்தி,  அச்சம்பவத்துக்கு  பெர்காசாதான்  காரணம்  என்றும்  கூறிக்கொண்டது.

மக்கள்  பொய்யான  செய்திகளை  நம்பக்கூடாது, பரப்பக்கூடாது, பகிர்ந்துகொள்ளக்  கூடாது  என்று  கேட்டுக்கொண்ட  காலிட்,  அது  பொறுப்பற்ற  செயல்  என்றும்  அதனால்  பொது  ஒழுங்கும் மக்களின்  அன்றாட  வாழ்வும்  சீர்குலையலாம்  என்றார்.