ஆறு மாநிலங்களில் வெள்ளம் இங்கே, அங்கே அமெரிக்க அதிபருடன் கோல்ப் விளையாடுகிறார் நஜிப்

 

Golfnagib1கிறிஸ்துமஸுக்கு முன்தினம் பிரதமர் நஜிப் ரசாக் ஹவாயில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் கோல்ப் விளையாடினார்.

பிரதமர் நஜிப் தற்போது ஹாவாயில் விடுமுறையைக் கழிக்கிறார் என்று வெள்ளைமாளிகையை மேற்கோள் காட்டி த வாஷிங்டன் போஸ்ட் நேற்று செய்தி வெளியிட்டது.

பிரதமர் நஜிப்பின் அதிகாரப்பூர்வமான ஜெட் விமானம், பதிவு எண் 9M-NAA, கோலாலம்பூரிலிருந்து டிசம்பர் 20 இல் ஹோனலுலு சென்றடைந்தது தெரியவந்துள்ளது.

அன்றைய தினம் நஜிப் அவரது பஹாங் மாநிலத்தில் வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்ததாக கூறப்படுகிறது.

தற்போது வெள்ள நிலவரம் கடுமையாகியுள்ளது. 90,000 க்கு மேற்பட்ட மக்கள் மாற்று இடங்களில் தங்கவைப்பட்டுள்ளனர். கிளந்தான்,Golfnagib2 திரங்கானு, பகாங், பேராக், பெர்லிஸ் ஆகிய மாநிலங்களுடன் தற்போது கெடா மாநிலமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

நாட்டு மக்கள் இந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கையில் நாட்டின் பிரதமர் வெளிநாட்டில் கோல்ப் விளையாடிக் கொண்டு விடுமுறையில் இருப்பது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பிரதமர் விடுமுறையில் சென்றிருப்பதைத் தற்காத்து பேசிய துணைப் பிரதமர் முகைதின் யாசின் அவரும் மனிதர்தான். கடுமையாக உழைத்துள்ள அவருக்கு விடுமுறை தேவைப்படுகிறது என்றார்.

“நான் இருக்கிறேன். கவலையை விடுங்கள்” என்று அவர் கூறினார்.