அல்தான்துயா கொலை வழக்கில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை

 

Althanthuya1மங்கோலிய பெண் அல்தான்துயா கொலை வழக்கில் அவரை கொலை செய்த குற்றச்சாட்டிலிருந்து தலைமை இன்ஸ்பெக்டர் அஸிலா ஹாட்ரி மற்றும் கோப்ரல் சிருல் அஸார் உமார் ஆகியோரை மேல்முறையீட்டு நீதிமன்றம் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்ததற்கு எதிராக அரசாங்கம் பெடரல் உச்சநீதிமன்றத்தில் தொடுத்திருந்த மேல்முறையீட்டை அந்நீதிமன்றம் செவிமடுத்து நேற்றுடன் ஆறு மாதங்களாகி விட்டன.

ஆனால், பெடரல் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அரிப்பின் ஸக்காரியா தலைமையிலான ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வு இன்னும் எவ்வித முடிவையும் எடுக்கவில்லை.

இதனைத் துணை சொலிசிட்டர் ஜெனரல் 1 துன் அப்துல் துன் ஹம்சா மற்றும் மேல்முறையீட்டில் பிரதிவாதிகளைப் பிரதிநிதிக்கும் வழக்குரைஞர்களும் உறுப்படுத்தினர்.

“இந்த நேரம் வரையில், தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை”, என்று துன் மஜிட் மலேசியாகினியிடம் கூறினார். மற்ற வழக்குரைஞர்களும் இவ்வாரத்தில் வெவ்வேறு கட்டங்களில் மலேசியாகினியிடம் இதனைக் கூறியுள்ளனர்.

பொதுவாக, தங்களுடைய தீர்ப்பை எழுதுவதற்கு நீதிபதிகளுக்கு மூன்று மாதகால அவகாசம் கொடுக்கப்படுகிறது.

ஆனால், சில சிக்கலான வழக்குகளில் மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் பெடரல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு எழுதுவதற்கு 6 மாதங்கள் வரையில் எடுத்துக்கொள்கின்றன என்று தலைமை நீதிபதி கூறியதாக பெர்னாமா செய்தி கூறுகிறது.

இவ்வழக்கில் அரசு தரப்பின் வாதம் கடந்த ஜூன் மாதத்தில் மூன்று நாள்களுக்கு நடத்தப்பட்டது.