கிளந்தானுக்குக் கூடுதல் ஹெலிகாப்டர்களும் படகுகளும் தேவை

kelanவெள்ளக்காடாக  மாறியுள்ள  கிளந்தானுக்கு  இன்று  பறந்து  சென்ற  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின், அங்கு  பாதிக்கப்பட்ட  மக்களுக்கு  உதவ  கூடுதல்  ஹெலிகாப்டர்களையும்  படகுகளையும்  தரை  வாகனங்களும்  பயன்படுத்த  வேண்டும்  என  உத்தரவிட்டார்.

வெள்ளம்  எதிர்பார்க்கப்பட்டதைவிட  மோசமாக  இருப்பதாகக்  கூறிய  அவர்  இப்போது பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர்களும்  படகுகளும்  வாகனங்களும்  போதுமானவை  அல்ல  என்றார்.

“தேசியப் பாதுகாப்பு  மன்றம்  இதில்  கவனம் செலுத்தும். ஏழு  ஹெலிகாப்டர்கள்  பயன்படுத்துகிறோம்…..இவை  போதாது. படகுகளும்  போதுமானவை  அல்ல. போக்குவரத்து  வசதிகளைக் கூட்ட  வேண்டும்”, என  கோத்தா  பாருவில்  ஸ்கோலா  கெபாங்சான்  பெங்காலான்  செபா 1-இல் செயல்படும்  துயர்துடைப்பு  மையத்துக்கு  வருகை  மேற்கொண்ட  பின்னர்  முகைதின்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.