நாட்டின் மிக மோசமான வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள கிளந்தான் மாநிலத்தின் மந்திரி புசாரும் வெள்ளத்தில் அகப்பட்டுக்கொண்டார். அதனால் தமது தொகுதி மக்களுக்குக்கூட உதவி வழங்க முடியாத நிலையில் இருக்கிறார். அதற்காக அவர் மக்களிடம் மன்னிப்பு கோருகிறார்.
தமது வீட்டிற்குள்ளும் தண்ணீர் புகுந்து விட்டதால் தம்மால் வீட்டை விட்டு வெளியேறி தமது மாநில தொகுதி மக்களுக்கு உதவிகள் அளிக்க முடியாமல் இருப்பதாக அவர் தமது முகநூல் அறிக்கையில் கூறியுள்ளார்.
கிளந்தான் மந்திரி புசார் அஹமட் யாக்குப் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு உதவிகள் அளிக்குமாறு அரசாங்க அமைப்புகளுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
மேலும், மக்களை பிராத்தனை செய்யுமாறு கேட்டுக்கொண்ட அவர் சமய இலாகவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
முதலில் உமது உயிரை காப்பாத்திக்க இல்லையெனா வெள்ளத்தோடு முழக்கிட போறே..? ஹுடுட் வந்து உன்னை காப்பாத்தாது..?
வெள்ளம் மந்திரி புசாரை வீட்டு காவலில் முடக்கிப் போட்டுள்ளது!
தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத தலைவர் எப்படி கிளாந்தான் மக்களை காப்பாற்ற முடியும்?. வெள்ளம் வரும் முன் வீட்டை விட்டு வெளியேறி மாநில அரசாங்கத் தலைவர் என்ற பொறுப்பை செவ்வனே செய்திருக்க வேண்டாமா?. அதை விடுத்து நானே வெள்ளத்தில் மாட்டிக் கொண்டேன் ஆதலால் பிறருக்கு உதவி செய்ய இயலவில்லை என்று தனது முகனூலில் பதிவுயிடுவோரை நம்பி மக்கள் எப்படி மாநில முதல் அமைச்சராக தேர்ந்தெடுத்தனர்?. கையாலாகாத முதல் அமைச்சர் என்று நன்றாகத் தெரிகின்றது. கிளாந்தான் மக்கள் கோவிந்தா!, கோவிந்தா!.
நீ சொல்லும் அந்தக் கடவுள், எதோ உமக்கு ஒரு செய்தியை சொல்ல வருகிறார். ஹுடுத் சட்டம் சமர்பிக்கும் அன்று எதேச்சையாக இப்படி தடை ஏற்படும்? நீங்களும் நல்ல முறையில் கடவுளை வழிபடுகிறீர்கள் அதனாலேயே அவர் நீர் செய்யப்போகும் தவற்றை உமக்கு மறைமுகமாக உணர்த்துகிறார். புரியுமா உமக்கு?
antha kadavuluku
பரவாயில்லை நீ வீட்டிலேயே இருந்து hudud law பற்றி உன் குடும்பத்தோடு பேசு
அனைத்துமே ஹூடுட் சட்டத்துக்கு எதிராக இருக்கிறது! இனிமேலும் அதனைப்பற்றிப் பேசுவதை தவிர்க்க வேண்டும்!
வெள்ளப் பெர்ரிடரையும் ,ஹுடுத்தயும் அவர்களின் வசதிக்கேற்பச சாதகமாக நியாயப் படுதிக்கொள்வார்கள்!