பெலிதோங் தீவுக்கும் களிமந்தானுக்குமிடையில் கரிமாத்தா நீரிணையில் விழுந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஏர் ஏசியாவின் QZ8501 விமானத்தில் பயணம் செய்த மேலும் இரு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக இந்தோனேசியாவின் இணைய செய்தித்தளமான டெம்போ அறிவித்துள்ளது.
அவை சுரபாயா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும்.
தேடும் இடம் இப்போது 13,500 சதுர கடல்மைலுக்கு விரிவடைந்திருப்பதாக மலேசிய கடல்படைத் தலைவர் அப்துல் அசீஸ் ஜாப்பார் டிவிட்டரில் கூறியிருக்கிறார்.
நேற்றுவரை 6,160 சதுர கடல்மைல் பரப்பளவில் தேடல் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதனிடையே, இன்று வானிலையில் ஒரு மாற்றம் ஏற்பட்டு நன்றாக இருப்பதால் போர்னியோ தீவுக்கு அப்பால் கடலில் விழுந்து கிடப்பதாக நம்பப்படும் ஏர் ஏசியா விமானத்திலிருந்து கருப்புப் பெட்டியை மீட்டெடுக்கும் முயற்சியில் முக்குளிப்பாளர்கள் ஈடுபடக்கூடும் என ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது.
நேற்று வானிலை மோசமாக இருந்ததால், இந்தோனேசியாவின் கடல்படையைச் சேர்ந்த 47 முக்குளிப்பாளர்கள் விபத்து நடந்த இடத்தைச் சூழ்ந்து கொண்டிருக்கும் போர்க் கப்பல்களுக்குப் பறந்து செல்வதுகூட தடைப்பட்டது,
விமானத்தின் கருப்புப் பெட்டியும் விமானி அறையின் குரல் பதிவியும் கிடைத்து விட்டால் விமானம் விழுந்தது எப்படி என்ற மர்மத்துக்கு விடை கிடைத்து விடும்.
வொர்க் like indrahghandi அதிரடி நடவடிக்கை கெட் help From west யு lazy sea people only good at கிவிங் reasons