மரங்களை வெட்டாதீர்:நஜிப் எச்சரிக்கை

treesஆதாயம்  கிடைக்கிறது  என்பதற்காக  மரங்களை  விருப்பம்போல்  வெட்டிச்  சாய்க்கக்  கூடாது;  சுற்றுச்சூழலைப்  பொறுத்தவரை  அனைவரும் கூடுதல்  பொறுப்புடன்  நடந்து  கொள்ள  வேண்டும்  எனப்  பிரதமர்  நஜிப் அப்துல்  ரசாக்  நினைவுறுத்தியுள்ளார்.

“மரங்களை  ஆதாயம்தரும்  பொருள்களாகப்  பார்க்காதீர்கள். மரங்களுக்கென  பணிகள்  உண்டு. இயற்கை  அன்னைக்குத்  துரோகம்  இழைத்தால்  இதுபோன்ற  பேரிடரைத்தான்  எதிர்நோக்க  வேண்டியிருக்கும்”, என்றாரவர்.

நாட்டில்  வெள்ளப் பிரச்னைகளைத்  தீர்ப்பதற்கு  குறுகிய-காலத்  திட்டம், நீண்ட-காலத்  திட்டம்  எனச்  செய்ய  வேண்டியது  நிறைய  உள்ளதாக  பிரதமர்  கூறினார்.