மரங்கள் பெருமளவில் வெட்டப்பட்டது கிளந்தானில் வெள்ளப் பெருக்கு ஏற்பட காரணமாக இருந்திருக்கலாம் என்பதை ஒப்புக்கொண்ட பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் ஆயுப் ஆனால், அதுவே தலையாய காரணமாக இருக்க முடியாது என்பதையும் வலியுறுத்தினார்.
ஏனென்றால் மற்ற மாநிலங்களிலும் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது என்றாரவர்.
“ஜோகூரில் பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கு என்ன காரணம்? கெமமானில்? பெக்கானில்?”.
செய்தியாளர் கூட்டமொன்றில் கிளந்தானில் பரவலாக மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டது அம்மாநிலத்தில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியிருக்கலாமோ என்று வினவப்பட்டதற்கு அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் இவ்வாண்டு மிகப் பெரிய வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணத்தை விரிவாக ஆராய வேண்டும் என சலாஹிடின் கூறினார்.
காடுகள் வெட்டப்பட்டால் காட்டாறு வெள்ளம் வரும் என்பதை சின்னப் பிள்ளைகள் கூட தங்களது பூகோள பாடத்தில் படித்திருப்பார்கள். பாஸ் கட்சி ஆட்சியாளர்கள் பூகோள பாடம் படிக்கவில்லை போலும்.
வெள்ளப் பேரிடர்களுக்கு அனேக காரணங்கள் உள்ளன. ஆனால் தலையாய காரணமே காடழிப்புதான்.
மரங்கள் வெட்டப் பட்டதுதான் வெள்ளப் பெருக்கின் காரணமா? காலத்துக்கேற்ற அருமையான கேள்வி . அன்பர்களே ! கடந்த 80ஆம் ஆண்டுகளில் இப்போதைய வெள்ளப் பெருக்கை நாம் கண்டதுண்டா? . அறிவுக்கேற்ற இதோ சில காரணங்கள்
1) மரங்கள் வெட்டப்படுவது (கடலோர மற்றும் ஆற்றோர மரங்கள் குறிப்பாக காண்டா மரங்கள்).இதற்க்கு யார் அனுமதி வழங்கியது ?.வளர்ந்த வெளிநாடுகளில் இது போன்று மரங்கள் வெட்டப்படுவதில்லை.
2) மேம்பாடு என்ற பெயரில் இயற்க்கை வளங்களை அழிப்பது ( மலைகளும் மரங்களும் அழிக்கபடுவது ) மலைமேட்டில் உள்ள காடுகளை அழித்தால் மழைகாலத்தில் திடீர் வெள்ளம் பெருக்கோடும்,
3) ஆறுகள் மற்றும் கால்வாய்களை மேம்பாடு செய்யாதிருத்தல் (dredging ) .
மேற்கண்ட யாவையும்
80ஆம் ஆண்டுகளில் இதுபோன்று நடந்ததில்லை .ஆனால் இப்போது ஏன் என்று சிந்தித்து பார்க்க வேண்டுகிறேன் நன்றி.
தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே “அறிவுகொழுந்து “. முதன்மை காரணம் நிச்சயம் மரங்கள் வெட்டபடுவது இல்லை.. இன்னும் உங்களின் ஹுடுட் சட்டம் அமல்படுத்த படாமல் இருப்பதுதான் .. எனவே சற்றும் தாமதிக்காமல் , அடுத்த வாரமே ஹுடுட் அமல்படுத்துங்கள் .. வெள்ளம் தானாகவே வடியும் ..
மழைக்கும் மரத்துக்கும் நிக்கா செய்து வைத்தால் சரியாயிடும்.
KUMKI சொல்வது தவறு கு…க்கும் shan…um எமகண்ட நேரத்தில் கல்யாணம் செய்து வைத்தால் மழை பொருத்து பெய்யுமாமே இது எப்படி இருக்கு?
சகுனிக்கு விளக்கு புடிச்சி பழக்கமோ……………………..