ஏர்ஏசியா விபத்து: 16 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன

AirASia 16 bodiesஏர்ஏசியா சுரபாயா-சிங்கப்பூர் பயணித்தின் போது விபத்திற்குள்ளாகி மரணமடைந்த 162 பயணிகளில் இதுவரையில் 16 சடலங்கள் கடலிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

நேற்று ஒரு பயணியின் சடலம் கிழக்கு ஜாவாவில் வாழும் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மணி 5.30 க்கு சுரபாயாவிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூர் நோக்கி பறந்து கொண்டிருந்த ஏர்ஏசியா விமானம் விபத்திற்குள்ளாகியதால் அதில் பயணித்த அணைவரும் மரமடைந்துள்ளனர். அவர்களின் சடலங்களையும் சிதைந்த பாகங்களையும்,  பொருள்களையும் தேடும் பணி தொடர்கிறது.

இவ்விபத்தில் மரணமுற்ற பயணிகளின் குடும்பத்தினருக்கு ஐநா தலைமைச் செயலாளர் தமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.