தேசிய வங்கி தொழிலாளர்களின் சங்கம் (என்யுபி) அதன் அகப்பத்தில் மே பேங்க் குறித்து அவதூறான அறிக்கைகளைப் பதிவேற்றம் செய்திருந்திருந்ததாகக் கூறி அச்சங்கம் மற்றும் அதன் தலைமைச் செயலாளர் ஜே. சோலமன் ஆகியோருக்கு எதிராக மே பேங்க் தொடுத்திருந்த வழக்கில் அது தோல்வி கண்டது.
தொழிற்சங்கத்திற்கு எதிரான இவ்வழக்கை கடந்த புதன்கிழமை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற நீதிபதி ஹு சியு கெங் தொழிற்சங்கச் சட்டம் 1959 செக்சன் 22 தொழிற்சங்கம் மற்றும் அதன் அதிகாரிகளுக்கு இது போன்ற வழக்கிலிருந்து விதிவிலக்கு அளித்துள்ளது என்று தீர்ப்பில் கூறியுள்ளார்.
மே பேங்கின் வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி ஹு பிரதிவாதிகளான என்யுபி மற்றும் சோலமன் ஆகியோருக்கு செலவுத் தொகையாக ரிம30,000 வழங்குமாறு மே பேங்கிற்கு உத்தரவிட்டார்.
நீதிமன்ற விசாரனையின் போது என்யுபியை பி. கஜேந்திரன் மற்றும் எலெக்ஸ் டெ சில்வாவும் மே பேங்க்கை எம். பத்மநாதனும் பிரதிநித்தனர்.
சரியான அடி.